Gautam Adani out of world's top-10 billionaires list Twitter
இந்தியா

ஹிண்டன்பெர்க்: டாப் 10 பணக்காரர் பட்டியலிலிருந்து தூக்கியெறியப்பட்ட அதானி - தற்போதைய நிலை?

அதானி, பணக்காரர் பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளார் என்று ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Priyadharshini R

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின் நிறுவனப் பங்குகளின் விலைகள் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஜனவரியில் இதுவரை $36 பில்லியன் சொத்தை இழந்த கௌதம் அதானி இப்போது உலகின் டாப்10 பணக்கார பில்லியனர்களின் எலைட் கிளப்பில் தனது இடத்தை இழந்துள்ளார்.

அதானி இப்போது 84.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பணக்காரர் பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளார் என்று ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

உலகின் முதல் 500 பணக்கார ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியலில், அதானி 2023 காலண்டர் ஆண்டில் இதுவரை கண்டிராத வீழ்ச்சியை கண்டுள்ளார்.

அதானி

அதானி 2022 ஆம் ஆண்டில் சுமார் $40 பில்லியன் வருடாந்திர லாபத்துடன் மிகப்பெரிய பணக்காரரானார்.

தற்போது அவர் கடந்த ஆண்டு ஈட்டிய அனைத்து ஆதாயங்களையும் இழந்துவிட்டதாகத் தெரிகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அவருக்கு அடுத்தபடியாக 12வது இடத்தில் இருக்கிறார்.

நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த வாரம் 32,000-வார்த்தைகள் கொண்ட அறிக்கையை வெளியிட்டது.

நிறுவனங்களின் கணக்கு வழக்கு முறைகேடுகள், தவறான நபர்கள் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் இருப்பது, கம்பெனி தொடர்பான பரிமாற்றங்கள் ரகசியமாக வைக்கப்படுவது அல்லது பொதுவெளியில் அறிவிக்கப்படாமல் இருப்பது, முறைகேடாக வியாபாரம் செய்வது, முதலீட்டாளர்கள் மற்றும் அரசு தரப்பை ஏமாற்றி ஒரு நிறுவனத்திற்குள் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள் போன்ற பிரச்னைகளை இவர்கள் ஆராய்ந்து வெளியிடுகிறார்கள்.

அந்த வகையில் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகள், பங்கு சந்தை விலை தீர்மானிப்பதில் மோசடிகள் செய்திருப்பதாக இந்த ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சிகள் கூறியிருந்தது.

இதனால் ஒவ்வொரு வர்த்தக நாளிலும் அதானி குழுமம் பில்லியன் டாலர்களை இழந்து வருகிறது.

கெளதம் அதானி

ப்ளூம்பெர்க் தரவுகள், அதானி தனது குழும நிறுவனங்கள் அதன் சந்தை மூலதனத்தில் நான்கில் ஒரு பங்கை அழித்துவிட்டதால், கடந்த மூன்று வர்த்தக அமர்வுகளில் $34 பில்லியன் இழந்துள்ளதாகக் காட்டுகிறது

இது குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தேவையற்ற தாக்குதல் மட்டுமல்ல, இந்தியா, இந்திய நிறுவனங்களின் சுதந்திரம், ஒருமைப்பாடு மற்றும் தரம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி ஆகியவற்றின் மீதான கணக்கிடப்பட்ட தாக்குதல் ஆகும் என்று அதானி கூறியிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?