உலகத்தை மனித இனம் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர விரும்பிய நாள் முதல், நமக்குள் யார் நம்பர் 1 என பட்டியலிட்டுக் கொள்ள தொடங்கிவிட்டோம்.
அப்படி உலகின் நம்பர் 1 பணக்காரர் என்கிற இடத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் கெளதம் அதானி, இப்போது மற்றொரு முக்கியமான பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
உலக அளவில் வணிகம், அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், நிதி, பொழுதுபோக்கு என பல துறைகளில், தங்களுடைய துறையையே வரையறுத்த நபர்கள் யார் என்கிற பட்டியலை வெளியிட்டது ப்ளூம்பெர்க்.
அப்பட்டியலில் வணிகப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் கெளதம் அதானி.
இந்த 2022ஆம் ஆண்டில், வேறு எந்த ஒரு உலகப் பணக்காரரை விடவும், சதவீத அடிப்படையில் அதிவேகமாக இவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
இதற்கு முன் உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலம் வலம் வந்து கொண்டிருந்தார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி, கூகுள் நிறுவனத்தின் லாரி பேஜ், செர்ஜி பிரின், உலக பங்குச் சந்தை முதலீட்டின் பிதாமகர் வாரன் பஃபெட் ஆகியோரை மிகக் குறுகிய காலத்திலேயே பின்னுக்குத் தள்ளினார் அதானி.
தற்போது சுமார் 125 பில்லியன் அமெரிக்க டாலரோடு, உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக வலம் வந்து கொண்டிருக்கிறார்
இந்த ஆண்டு முழுக்க பல டீல்களை தன் நிறுவனத்துக்குச் சாதகமாக முடித்துள்ளார்.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஹோல்சிம் லிமிடெட் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளைக் கையகப்படுத்தியது, என் டி டிவி தொலைக்காட்சி & ஊடக நிறுவனத்தை வாங்கியது, உலகின் மிகப்பெரிய சோலார் மின்சக்தி நிறுவனமாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் உருவெடுத்தது என இப்பட்டியலில் கெளதம் அதானி முதலிடத்தைப் பிடிக்க பல காரணங்கள் கூறப்படுகின்றன.
கெளதம் அதானி என் டி டிவியை எப்படி விலை மலிவாக வாங்கினார் என்பதை கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் படிக்கலாம்
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கெளதம் அதானி, பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமாகக் பழகி வருகிறார் என்றும், அதானி பெரும்பணக்காரர் ஆவதற்கு க்ரோனி கேப்பிட்டலிசம் ஒரு முக்கிய காரணம் என்றும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் தான் இருக்கின்றன.
அதானியை தொடர்ந்து, இணையத்தின் 'கூல் கார் கை' (Cool Car Guy) என்றழைக்கப்படும் ரேண்டி நானென்பெர்க் (Randy Nonnenberg) இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
பழங்காலத்து கார்களை ஆன்லைனிலேயே விற்று, ஒட்டுமொத்த இணையத்தையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்கச் செய்தவர் ரேண்டி
ரேண்டியின் நிறுவனம், 2022ஆம் ஆண்டில் செப்டம்பர் மாத வாக்கிலேயே 1 பில்லியன் அமெரிக்க டாலர் விற்பனை வருவாயைக் கடந்துவிட்டது. இந்த ஆண்டின் முடிவில் இந்நிறுவனத்தின் வருவாய் 1.3 பில்லியன் டாலரைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற மாடல் அழகி கிம் கர்தாஷியனின் ஆடை நிறுவனம் 3.2 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்ததை விட, இந்த ஆண்டில் அவரது ஆடை நிறுவனத்தின் மதிப்பு சுமார் 9 மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust