Teen Dies After LED TV Explodes Inside Home Twitter
இந்தியா

LED TV வெடித்ததால் சிறுவன் பலி: தாய், சகோதரிக்கு பலத்த காயம் - என்ன நடந்தது ?

Priyadharshini R

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நடந்த விபத்தில், வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் எல்இடி டிவி வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தார்.

அவரது தாய், சகோதரர் மற்றும் நண்பர் என வீட்டில் இருந்த மற்ற 3 பேரும் காயமடைந்தனர்.

போலீஸார் கூற்றுப்படி, இந்த விபத்தில் கான்கிரீட் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததுள்ளது. இதனால் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் பீதியடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்

இந்த விபத்து குறித்து பக்கத்து வீட்டு பெண் கூறுகையில்,

"பலத்த சத்தம் கேட்டது. சிலிண்டர் வெடித்து விட்டது என்று நினைத்தேன். வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது பக்கத்து வீட்டில் இருந்து புகை வருவதை கண்டேன்.

என்ன என்று விசாரித்த போது, வீட்டில் உள்ள எல்இடி டிவி வெடித்தது தெரியவந்தது. இந்த விபத்தின் போது வீட்டில் நான்கு பேர் இருந்துள்ளனர்.

Death

இந்த விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளான். அவரது தாய், சகோதரர் மற்றும் அவரின் நண்பர் மூவர் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்”எனத் தெரிவித்தார்.

எல்இடி டிவி வெடித்ததில் முழு வீடும் அதிர்ந்து சுவரின் சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?