ஒரு ஊரைச் சுற்றிப்பார்க்க பல காரணங்கள் இருக்கலாம். இயற்கை அழகை ரசிக்க, வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட, மக்களின் கலாச்சாரத்தை ரசிக்க, கோவில்களில் வழிபட என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படி செல்லும் ஊர்களில் பலரும் சில காரணங்களால் அந்த ஊர்களின் தனித்துவமான உணவை ருசிக்காமல் விடுகிறோம். இதனால் அந்த ஊரை முழுமையாக சுற்றிப்பார்த்த நிறைவு நமக்குக் கிடைக்காது.
போகும் ஊர்களில் சாப்பிடுவது இருக்கட்டும், சாப்பிடுவதற்காகவே சில ஊர்களுக்கு போகலாம் என்றால் எங்கு போகலாம் தெரியுமா?
இந்தியாவில் அதன் தனித்துவமான உணவுக்காகவே விரும்பப்படும் சுற்றுலாத்தளங்கள் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.
கொங்கண் கடற்கரை மண்டல உணவுகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. கோவா செல்லும் போது தாய் உணவகங்கள், சீன உணவகங்கள், ஐரோப்பிய உணவகங்களுக்குச் செல்லாமல், அந்த மண்ணின் ருசியைப் பேசும் கடல் உணவுகளை சுவைக்கலாம்.
லடாக்கில் பாஸ்தா , பீட்சா கிடைக்கும் என்றாலும் உள்ளூர் உணவுகளான டிங்மோ, துக்பா, சுடாகி போன்றவற்றை முயற்சி செய்யலாம்.
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கின்னௌரில் என்னதான் குளிர்ச்சியான காலநிலை இருந்தாலும் அங்கு கிடைக்கும் ராஜ்மா என்ற உணவுக்காக தான் சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்கின்றனர்.
ஜெய்சல்மாருக்கு செல்லும் சுற்றுப்பயணிகள் ராஜஸ்தானின் அழகை மறந்தாலும் கட்டே கி சப்ஜி, பாஜ்ரி கி ரோட்டி மற்றும் சூர்மாவின் சுவையை மறக்க மாட்டார்கள்.
கூர்க் சமையலுக்கு தனித்துவமான ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக அங்கு கிடைக்கு கெடாம்புட்டு என்ற உணவை அனைவருமே ருசித்து உண்பர். பன்றி இறைச்சிக்கும் களிமண் நண்டுக்கும் கூர்க் பெயர்பெற்றது.
கொஹிமாவில் புளித்த மூங்கிலில் சமைக்கப்படும் பன்றிக்கறி மிகவும் பிரபலம். தவிர, மூங்கிலில் பரிமாறப்படும் ஒருவகை புளித்த பானமும் கொஹிமாவின் ஸ்பெஷல்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust