குஜராத்தில் நவராத்திரி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெறும் வயதாபவர்கள் என்றில்லாமல் சிறுவர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை உயிரிழந்திருக்கின்றனர். பரோடா மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தவர்களில் மிகவும் குறைந்த வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை அஹமதாபாத்தைச் சேர்ந்த 24வயது இளைஞர் கர்பா நடனத்தின்போது திடீரென உயிரிழந்தார். இதேப்போல மற்றொரு மாவட்டத்தில் 17 வயது இளைஞர் நடனத்தின் போது மரணமடைந்தார். இதுபோல தொடர்ச்சியான பல வழக்குகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.
நவராத்திரி கொண்டாட்டத்தின் 6 நாட்களில் மட்டும் 521 அவசர ஆம்புலன்ஸ் அழைப்புகள் இதய-சம்பந்தமாக பெறப்படுள்ளன. இவையும் மாலை முதல் அதிகாலை 2 மணிக்கு இடையிலான நேரத்திலேயே வந்திருக்கின்றன. இதுதான் கர்பா நடனம் நடக்கும் நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடருவது அரசாங்கத்தையும் கர்பா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் விழிப்படைய வைத்துள்ளது. அரசு கர்பா நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள சுகாதார நிறுவனங்களை எச்சரிக்கை செய்துள்ளது.
கர்பா நடனம் நடைபெறும் இடங்களில் ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust