குஜராத்: 250 ஆண்டுகளில் 200 மீட்டர் நகர்ந்த மாமரம்! ’நடக்கும்’ மரத்தின் மர்மம் என்ன?  ட்விட்டர்
இந்தியா

குஜராத்: 250 ஆண்டுகளில் 200 மீட்டர் நகர்ந்த மாமரம்! ’நடக்கும்’ மரத்தின் மர்மம் என்ன?

Keerthanaa R

மனிதனின் மூளைக்கு எட்டாத பல மர்மமான விஷயங்கள் இன்றும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. சில சமயங்களில் அதற்கு அறிவியல் ரீதியிலான விடைகள் கிடைக்கும். அதுவும் நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு தான்.

ஒரு சில மர்மங்களுக்கு அறிவியல் சார்ந்த விளக்கங்கள் கிடைக்காது. ஏன் நடக்கிறது என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கும், அதனுடன் சேர்ந்து வாழ நாம் பழகியிருப்போம்.

அப்படித்தான் இருக்கிறது குஜராத்தின் ஒரு கிராமத்தில் இருக்கும் நடக்கும் மரம். இந்த நடக்கும் மரம் விதைக்கப்பட்ட இடத்திலிருந்து சிறுகச் சிறுக 200 மீட்டர் நகர்ந்துள்ளது என அக்கிராமத்து மக்கள் கூறுகின்றனர்.

இதன் பின்னிருக்கும் கதை என்ன?

நகரும் மரம்

தெற்கு குஜராத்தின் புல்சார் மாவட்டம் சஞ்சன் கிராமத்தில் அமைந்திருக்கிறது மாமரம் ஒன்று. இந்த மரம் நகரும் சக்தி கொண்டது என கிராமத்தினர் நம்புகின்றனர், கூறுகின்றனர்.

குஜராத்தின் 50 பாரம்பரிய மரங்களின் பட்டியலில் இருக்கும் இந்த மாமரமானது, பல அதிசயங்களை உள்ளடக்கியது என்கிறார் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் எச்.எஸ். சிங்.

முதல் விதை

இந்த மரத்தை சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன், இங்கு குடியேறிய பார்சி மக்கள் இங்கு நட்டுவைத்திருக்கலாம் என கிராமத்தினர் கூறுகின்றனர். வன அதிகாரிகள் சேகரித்த தகவல்களும் கிட்ட தட்ட கிராமவாசிகளின் கூற்றுடன் ஒத்துப்போகிறது.

இருப்பினும் இந்த மாமரத்தின் சரியான வயது இது தான் என கூறும் சான்றுகள் இதுவரை இல்லை.

கடந்த 250 ஆண்டுகளில் சுமார் 200 மீட்டர் வரை இம்மரம் கிழக்கு பக்கமாக நகர்ந்திருக்கிறது என்கின்றனர் கிராம மக்கள். ஒவ்வொரு 20 அல்லது 25 ஆண்டுகளுக்கும் மூன்று அல்லது நான்கு மீட்டர்கள் நகர்ந்திருக்கிறது என நம்பப்படுகிறது.

உண்மையில் மரம் நகர்கிறதா?

இந்த மரத்தின் கிளைகள், வழக்கமாக மற்ற மரங்களில் வளருவது போல அல்லாமல், பிரதான தண்டிலிருந்து தரைக்கு இணையாக (parallel ஆக) வளர்கிறது.

தரையை தொடும் இந்த கிளையிலிருந்து வேர்கள் உருவாகி அது மரத்தின் மற்றொரு தண்டாக (Stem) ஆக வளர்ந்த பின்னர், கிளை முளைத்த அசல் தண்டு காயந்துவிடுகிறது.

வளரும் இத்தண்டுகள் மரத்தின் அருகே அதன் பக்கங்களில் படர்வதால், மரம் நகருவதுபோல காட்சியளித்திருக்கிறது. உண்மையில் மரம் ‘நடக்கவில்லை’ எனக் கூறுகிறார் வன அதிகாரி எச் எஸ் சிங்.

சஞ்சன் கிராமம்

8ஆம் நூற்றாண்டு முதல் 10 நூற்றாண்டுக்குள், குஜராத்தில் தஞ்சம் புகுந்த ஜோரோ ஆஸ்ட்ரியன் அகதிகள் இந்த சஞ்சன் கிராமத்தை நிறுவினர்.

சஞ்சன் கிராமம் தமன் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. தமன் ஒரு காலத்தில் போர்த்துகீசிய காலனியாக இருந்தது

நடக்கும் மரத்தின் சொந்தக்காரர்

நடக்கும் மாமரம் வாலி அகமது அச்சு என்பவரின் தோட்டத்தில் இருக்கிறது. இந்த தோட்டத்தை வாலியின் தந்தை அகமது அச்சு 100 ஆண்டுகளுக்கு முன் வாங்கியுள்ளார்.

இந்த மரத்தின் மாம்பழங்கள், மற்ற பழங்களை விட அளவில் சிறியதாக இருக்கின்றன. மேலும் முழுதாக பழுத்துவிட்ட பழங்கள் அடர் சிவப்பு நிறத்தில் இருக்குமாம்.

கிராமத்தில் வசிக்கும் வயோதிகர்கள் பலரும், இந்த மரம் நகருகிறது என்பதை ஆணித்தரமாக நம்புகின்றனர். மேலும் இம்மரம் புனிதமாதாக கருதப்பட்டு, வழிப்படப்பட்டும் வருகிறது

மரம் ஏன் நகர்கிறது (அதன் கிளை வித்தியாசமாக வளர என்ன காரணம்) என்பதை கண்டறிய பல முறை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அதற்கான அறிவியல் காரணத்தை சரியாக தெரிந்துகொள்ள முடியவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?