இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் ஒரு நாள் அழிவு என்பது உண்டு. அது ஆறறிவு கொண்ட மனிதனாக இருக்கட்டும், ஐந்தறிவு கொண்ட பறவைகள் மற்றும் மிருகங்கள் ஆகட்டும் அனைத்தும் ஒரு நாள் அழிவை சந்திக்கப் போகிறது.
இது தான் காலகாலமாக நாம் பார்த்து வரக்கூடிய விஷயம். அப்படி, பிறப்பு என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு இறப்பு என்பதும் உண்மை தான். இந்த உண்மைகளுக்கு அப்பாற்பட்டு சிலர் அழியாமையை நம்பவும் செய்கிறார்கள்.
குறிப்பாக, பல நூறு ஆண்டுகளாக கடவுளுக்கு தவம் இருக்கும் அடியார்கள் சாகா வரம் பெறுவார்கள் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கையும் மக்களிடையே இருக்கிறது.
இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இப்படி அழியாமை குறித்த குழப்பமான மனநிலைக்குள் இருக்கும் நமக்கு மரண பயம் இல்லாத ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் அது ஆச்சரியமளிக்கிறது அல்லவா?
ஆமாம், இமயமலை-திபெத் பகுதிகளை சுற்றி இருக்கும் கியாங்கஞ்ச் பகுதி அழியாமை மற்றும் சாகாவரம் குறித்த பல மர்மங்களை உள்ளடக்கி இருக்கிறது.
இந்த இடம் பழங்காலத்தில் அரசவையாக இருந்த இடம் என்று புத்தகங்களில் உள்ள குறிப்புகள் கூறுகிறது. ஆனால், இது மனிதர்களின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டுள்ள ஒரு மாயமான இடம் என்றும் சொல்லப்படுகிறது.
சரியாக சொல்லப்போனால் நேபாளம், உத்தரகண்ட் அல்லது இமாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளில் இந்த மாயமான இடம் இருக்கிறதாம்.
இந்த அசாதாரண இடத்திற்கு நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் செல்ல முடியாது என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், இந்த இடத்தைப் பற்றி சொல்லப்படும் புராணக் கதைகள் அழியாமை குறித்த சுவாரசியமான விஷயங்களைக் கூறுகிறது.
அதாவது, கியாங்கஞ்ச் பகுதியில் ஆன்மீக சக்தி கொண்ட யோகிகள், முனிவர்கள் பலர் வாழ்ந்து வந்ததாகவும், அவர்கள் தங்களது சக்தியை வைத்து பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியை மாற்றி சாகாவரம் பெற்றவர்களானதாகவும் புராணங்கள் கூறுகிறது.
ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்த புனிதமான இடத்தில் தெய்வீக அறிவு பாதுகாக்கப்பட்டு மற்ற தலைமுறைகளுக்கு அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது.
மந்திரங்களால் நிறைந்த இந்த இடத்துக்கு எந்தவொரு கெட்ட கர்மாவும் இல்லாதவர்களால் தான் செல்ல முடியும். இதற்கான வழியை சில பௌத்த நூல்கள் விளக்குகிறது. ஆனால், அங்கு செல்வதற்கான திசைகள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாதவை என்று புராணங்கள் கூறுகிறது.
இறுதியாக, இப்படி ஒரு இடம் நம்பிக்கையளவில் தான் இருக்கிறது. நிஜத்தில் இதனைப் பார்த்தவர்கள் யாருமில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust