அமித் ஷா - கான் Twitter
இந்தியா

"அமித் ஷா மாம்பழம்" - புதிய வகை பழத்துக்கு பெயர் வைத்த ஹாஜி கலிமுல்லா கான் - என்ன காரணம்?

Antony Ajay R

பழங்களுக்கு அரசன் என்றால் அது மாம்பழம் தான். ருசியின் உச்சத்தை எட்டச் செய்வதால் தான் அதற்கு "மா" எனப் பெயர் வைத்திருக்கின்றனர் பெரியவர்கள்.

ஆனால் இந்த மாம்பழத்தின் பெயராலேயே கவனிக்கப்பட்டுள்ளார் இந்தியாவின் மாம்பழ மனிதர் ஹாஜி கலிமுல்லா கான்.

ஹாஜி கலிமுல்லா கான்

மாம்பழ மனிதர்

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தோட்டக்கலை நிபுணர் ஹாஜி கலிமுல்லா கான். இவர் இந்தியாவின் மாம்பழ மனிதர் என அழைக்கப்படுகிறார்.

பல புதிய வகை மாம்பழங்களை உருவாக்கியுள்ள இவர், இதற்கு முன்னர் ஐஸ்வர்யா மாம்பழம், சச்சின் மாம்பழம் என பழங்களுக்கு பெயர் வைத்திருக்கிறார்.

அத்துடன் ஒரே மரத்தில் 300 வெவ்வேறு வகையான பழங்களை பழுக்க வைத்து சாதனைப் படைத்திருக்கிறார்.

இவருக்கு 2008ல் பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுஷ்மிதா சென் மாம்பழம்

தற்போது இவர் உருவாக்கியுள்ள ஒரு ஹைப்ரீட் மாம்பழத்துக்கு சுஷ்மிதா சென் மாம்பழம் எனப் பெயர் வைத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் பெயரை வைப்பதற்கு முன்னர் தனக்கு சுஷ்மிதா பற்றி தெரியாது எனக் கூறும் அவர், "சுஷ்மிதாவின் அழகு மட்டுமல்ல அவரது குழந்தைகளைத் தத்தெடுத்து மற்றவர்களுக்கு உதவி புரியும் குணத்துக்காகவும் இந்த பழத்துக்கு அவரது பெயர் வைத்தேன்" எனக் கூறினார்.

அமித் ஷா மாம்பழம்

இந்த ஹைப்ரீட் மாம்பழத்தை சுவைக்கும் போது இதற்கு மிக வலிமையான பெயரை வைக்க வேண்டும் என நினைத்ததால் அமித்ஷா பெயரை வைத்ததாக கான் கூறினார்.

இந்த மாம்பழங்கள் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் எனக் கூறும் அவர், "நீங்கள் சாப்பிடும் போது "இது நிச்சயம் அமித்ஷா தான்" எனக் கூறும் படி இதன் சுவை இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.

பிரபலங்களின் பெயர் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்க வேண்டும் என்பதனால் அவர்களின் பெயர்களை மாம்பழத்துக்கு வைப்பதாக கான் கூறியுள்ளார்.

கலாம், அமிதாப், யோகி போன்ற பலரது பெயர்களை இதற்கு முன்னர் மாம்பழத்துக்கு வைத்திருக்கிறார் இந்த 82 வயது கான்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?