இந்திய ரயில் நிலையங்களை சென்ட்ரல், சந்திப்பு, ஸ்டேஷன் என குறிப்பிடுவது ஏன்? ஒரு அடடே தகவல் Canva
இந்தியா

இந்திய ரயில் நிலையங்களை சென்ட்ரல், சந்திப்பு, ஸ்டேஷன் என குறிப்பிடுவது ஏன்? ஒரு அடடே தகவல்

ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளில் ஊரின் பெயர்களுக்கு அருகில், சென்ட்ரல், ஜன்க்‌ஷன், ஸ்டேஷன் என வெவ்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதன் பொருள் என்ன? இந்த பதிவில் காணலாம்

Keerthanaa R

நாம் ரயிலில் பயணிக்கும்போது நிறைய விஷயங்களை கவனிப்போம். ஆனால் பலவற்றிற்கு இது தான் பொருள் என தெரியாமல் இருக்கலாம்.

சமீபத்தில், ரயில் பெட்டிகளின் பின்னால் இருக்கும் X குறியீட்டின் பொருள் என்ன என்பதை இந்திய ரயில்ப்வே துறை விளக்கியிருந்தது.

Indian Railways: ரயிலின் பின்னால் இருக்கும் 'X'க்கு என்ன அர்த்தம்? விளக்கிய ரயில்வே துறை

அதே போல, ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளில் ஊரின் பெயர்களுக்கு அருகில், சென்ட்ரல், ஜன்க்‌ஷன், ஸ்டேஷன் என வெவ்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதன் பொருள் என்ன? இந்த பதிவில் காணலாம்.

சென்ட்ரல்

ஒரு ஊரில் பல ரயில் நிலையங்கள் இருந்தாலும், முக்கிய ரயில் போக்குவரத்துகளை கையாளும் ரயில் நிலையங்களை தான் சென்ட்ரல் எனக் குறிப்பிடுகிறோம்.

இங்கு மற்ற நிலையங்களை விட அதிகமான ரயில் போக்கு வரத்து இருக்கும்.

இந்தியாவில் மொத்தம் 5 சென்ட்ரல் நிலையங்கள் உள்ளன

  • சென்னை

  • திருவனந்தபுரம்

  • மும்பை

  • கான்பூர்

  • மங்களூரு

சந்திப்பு

இந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் உள்ளே வருவதற்கும், வெளியேறுவதற்கும் குறைந்தது 3 தனி தனி வழிகள் இருக்கும். இதன் பொருள் இணைப்பதாகும்.

உதாரணமாக கோவை சந்திப்பு, திருச்சிராபள்ளி சந்திப்பு, செகந்திராபாத் சந்திப்பு உள்ளிட்டவை.

இந்தியாவின் மதுரா சந்திப்பில் மொத்தம் ஏழு வழித்தடங்கள் சந்திக்கின்றன. இதுவே இந்தியாவின் மிகப் பெரிய சந்திப்பாகும்.

டெர்மினஸ்

இந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் உள்ளே வருவதும் வெளியேறுவதும் ஒரே திசையில் தான் இருக்கும். இதன் பொருள் முடிவு என்பதாகும்.

டெர்மினஸ்களில் ரயில்வே டிராக் அந்த குறிப்பிட்ட நிலையத்தோடு முடிவடைந்து விடும்.

உதாரணமாக பாந்த்ரா டெர்மினஸ், பீகார் டெர்மினஸ், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் போன்றவை

ஸ்டேஷன்

இவை பயணிகள் ஏறி இறங்க ஒரு நிறுத்தம். இங்கு உள்நுழைய ஒரு வழியும் வெளியேறும் வழியும் இருக்கும்.

சாலை

இந்த ரயில் நிலையம் மற்ற ரயில் நிலையங்களைப்போல் ஊருக்கு நடுவில் இல்லாமல் ஊரை விட்டு வெளியில் ஒதுக்கு புறமாக உள்ளது. இந்த குறிப்பிட்ட சாலையின் வழியாக அந்த ஊருக்கு செல்லவேண்டும் என்பதற்கான குறியீடு தான் சாலை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?