இந்திய தேசிய இலச்சினை; கண்டுபிடித்தது யார்? canva
இந்தியா

Fredrich Oscar Oertel: இந்தியாவின் தேசிய சின்னம் உருவாக காரணமாக இருந்த இவர் யார் ?

Gautham

உலகப் புகழ் பெற்ற இந்திய தேசிய கீதத்தை நோபல் பரிசு வென்ற ரபீந்திரநாத் தாகூர் தான் எழுதினார் என்பதை நம் அனைவரும் அறிவோம். அதேபோல இந்திய தேசியக் கொடியை முதலில் வடிவமைத்தவர் யார் என்று கேட்டால் பலரும் பிங்கலி வெங்கய்யா என கூறுவர்.

ஆனால் இந்தியாவின் தேசிய சின்னமான நான்கு சிங்கங்கள் நின்று கொண்டிருக்கும் வடிவத்தை யார் உருவாக்கினார்கள், அதற்கான அச்சாணியாக விளங்கியது யார் என்பது நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

தேசிய சின்னம்

ஒரு நாட்டின் சின்னம் என்பது அந்நாட்டின் குறியீடு. அது அந்நாட்டின் அதிகாரம். தேசிய சின்னம் பத்திரத்தில் இருந்தால், அந்நாட்டின் சார்பில் கையெழுத்து இட்டதாகப் பொருள்.

சாரநாத் தூணில் இருக்கும், நான்கு சிங்கங்கள் ஒரு பீடத்தின் மீது அமர்ந்திருப்பது போன்ற வடிவம் தான் இந்தியாவின் தேசிய சின்னம். ’வாய்மையே வெல்லும்’ என அதன் கீழ் எழுதப்பட்டிருக்கும்.

இந்த சொற்கள் முண்டக உபநிஷத் என்கிற நூலில் இருந்து எடுக்கப்பட்டதாக இந்தியா டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

1862 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி ஜெர்மன் நாட்டில் ஹன்னோவர் (Hannover) என்கிற பகுதியில் பிறந்தார் ஃப்ரெட்ரிக் ஆஸ்கர் ஓர்டல். மிக இளம் வயதிலேயே பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் குடிபெயர்ந்தார்.

இவர் தன் கட்டடம் மற்றும் கட்டுமான பொறியியலை படித்ததே இன்று இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி ரூர்கி கல்லூரியில் தான். இந்தக் கல்லூரி 19ஆம் நூற்றாண்டில் தாம்சன் காலேஜ் ஆப் சிவில் இன்ஜினியரிங் என்று அழைக்கப்பட்டது.

கல்லூரி படித்து முடித்த பிறகு ரயில்வே நிறுவனத்தில் ஒரு பொறியாளராக தன் வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு இந்தியன் பப்ளிக் போர்டு நிறுவனத்தில் 1883 முதல் 1887 வரை கட்டிட மற்றும் கட்டுமான பொறியாளராக தொடர்ந்தார். மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று ஆர்க்கிடெக்சர் கட்டிடக்கலையை படித்தார்.

தன் கட்டிடக்கலை படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் பொதுப்பணி துறையில் வேலைக்குச் சேர்ந்தார். வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் பல முக்கியமான நினைவுச் சின்னங்கள் அகழாய்வு தளங்களை அளவிட்டு பதிவு செய்தவர் இதே ஃப்ரெட்ரிக் ஆஸ்கர் ஓர்டெல் தான். 1892 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டிஷுக்கு உட்பட்டிருந்த பர்மா நாட்டின் தலைநகரான ரங்கூனுக்கு சென்று சில ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அன்றைய இலங்கைக்கு "ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி" என்கிற அமைப்பால் அபயகிரி தகோபா என்கிற புத்த மடாலய பகுதிக்கு அனுப்பப்பட்டு, ஆய்வு செய்து, அதை மறுக்கட்டுமாணம் செய்வது தொடர்பாக அவரிடம் பரிந்துரைகள் கேட்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் 1903 முதல் 1907 ஆம் ஆண்டு வரை பல பகுதிகளில் பணியமர்த்தப்பட்டார். உத்திரபிரதேசத்தின் தலைநகரான அலகாபாத், ஆக்ரா, லக்னோ, கான்பூர் போன்ற பல முக்கிய நகரங்களில் அந்த காலத்திலேயே பல கட்டுமானங்களை மேற்கொண்டார். சிலவற்றை மேற்பார்வையிட்டார்.

உத்திரபிரதேசத்தில் அவர் பதவியில் இருந்த காலத்தில் தான் 1904ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1905 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான அகழ்வாய்வில் சார்நாத் தூண் கண்டெடுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஏழு அடி உயரத்தில் நான்கு சிங்கங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி அமர்ந்திருப்பது போலவும், சிங்கங்களில் வாய் சற்றே திறந்து இருப்பது போலவும் அத்தூணில் வடிக்கப்பட்டிருந்தது.

சிங்கங்கள் அமர்ந்திருக்கும் பீடம் போன்ற பகுதியில் யானை, காளை, குதிரை என மூன்று விலங்குகளுக்கு இடையில் சக்கரம் வடிக்கப்பட்டு இருந்தது. அனைத்தும் பாலிஷ் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட மண் கற்களால் உருவாக்கப்பட்டிருந்தது.

உலகம் முழுக்க இருந்த அகழாய்வு செய்யும் அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களால் பெரிய ஆர்வத்தோடு இந்த சாரநாத் தூண் பார்க்கப்பட்டது, படிக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகும் இன்று வரை சாரநாத் தூணில் உள்ள சின்னம் தான் இந்தியாவின் சின்னமாக போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அத்தூணை அகழாய்வு செய்து கண்டுபிடித்த ஃப்ரெட்ரிக் ஆஸ்கார் ஓர்டெல் 1921 ஆம் ஆண்டு இந்தியாவின் பொதுப்பணித் துறையில் இருந்து ஓய்வு பெற்று, பிரிட்டனில் குடியேறி வாழ்ந்து வந்தார். தன் வீட்டுக்கே சார்நாத் என்று பெயரிட்டு இந்தியா குறித்து பொதுவெளியில் பல உரைகளை ஆற்றினார்.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டுபிடித்த பல சுவாரசிய விஷயங்களை, பொருட்களை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்கினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தேசிய சின்னத்தை வரைந்த 21 வயது இளைஞர்

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவிற்கு என பிரத்தியேகமாக ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் தேசிய சின்னத்தை வரையும் பணியை, அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ரபீந்திரநாத் தாகூரின் சாந்தினிகேதன் கலா பவன் பள்ளியின் தாளாளராக இருந்த பிரபல ஓவியர் நந்தலால் போஸிடம் கொடுத்தார்.

அவரது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தீனா பார்கவா என்கிற 21 வயது இளைஞரிடம் அப்பணியை கைமாற்றினார் நந்தலால் போஸ்.

தீனா பார்க்கவா சாரநாத் தூணை அடிப்படையாகக் கொண்டு ஒரு பீடத்தில் நான்கு சிங்கங்கள் அமர்ந்திருப்பது போன்ற இன்றைய இந்திய தேசிய சின்னத்தை வரைந்து கொடுத்ததாக பல வலைதள செய்திகள் குறிப்பிடுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?