மும்பையின் மின்மினி திருவிழா குறித்து தெரியுமா? ஏன் கொண்டாடப்படுகிறது? ட்விட்டர்
இந்தியா

மும்பையின் மின்மினி திருவிழா குறித்து தெரியுமா? ஏன் கொண்டாடப்படுகிறது?

மகாராஷ்டிராவின் பந்தர்தாரா, கோத்தலிகாட், ராஜமாச்சி கோட்டை, சம்ராட் புருஷ்வாடி உள்ளிட்ட இடங்களில் மின்மினிப்பூச்சி திருவிழா நடைபெறும். மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த திருவிழா நடைபெறுகிறது.

Keerthanaa R

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண்டு தோறும் மின்மினிப்பூச்சி திருவிழா கொண்டாடப்படுகிறது. மே மற்றும் ஜூன் மாதங்களில், பருவமழைக் காலம் தொடங்கும் முன் இத்திருவிழாவானது கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டும் கோலாகலமாக இந்த திருவிழா நடைபெறவுள்ளது

இந்த திருவிழாவைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர். குளிர் காலத்தில் இந்த மின்மினிப் பூச்சிகள் மண்ணுக்குள் ஒளிந்துகொள்கிறது. கோடை, வேனில் காலங்களில் இவை வெளியில் வரும்.

வண்டு இனத்தைச் சேர்ந்த மின்மினிப் பூச்சிகளில், உலகெங்கிலும் சுமார் 2000 வகை சிற்றினங்கள் உள்ளன.

மின்மினிப் பூச்சிகள் ஏன் ஒளிருகின்றன?

ஆண் மின்மினி பூச்சிகள் தங்கள் பெண் இணையை ஈர்க்கவே ஒளிருகின்றன.

மின்மினிப் பூச்சிகள் ஒரு வித வேதி வினையை அவற்றின் உடலில் உருவாக்குகின்றன. இதன் காரணமாக அவற்றின் உடலில் இருந்து ஒளி வெளியாகிறது.

மின்மினிக்களின் உடலில், லூசிஃபெரின் எனப்படும் கனிம மூலக்கூறுகள் லூசிஃபெரஸ் எனப்படும் வினையூக்கிகளால் ஆக்சிஜனேற்றம் அடைந்து ஒளிரும். மின்மினிக்களின் உடலில் இந்த லூசிஃபெரின் உள்ளது

மின்மினி பூச்சி திருவிழா

இந்த மின்மினிப்பூச்சிகளை காண்பதற்காகவே மும்பையில் ஆண்டுதோறும் மின்மினிப் பூச்சி திருவிழா நடைபெற்று வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் இந்த ஒளிரும் வண்டுகளை காண சிறந்த இடமாகும்.

மகாராஷ்டிராவின் பந்தர்தாரா, கோத்தலிகாட், ராஜமாச்சி கோட்டை, சம்ராட் புருஷ்வாடி உள்ளிட்ட இடங்களில் மின்மினிப்பூச்சி திருவிழா நடைபெறும். முன்பே சொன்னதுபோல, மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த திருவிழா நடைபெறுகிறது

காரணம், இந்த பருவமழை மற்றும், வேனில் காலத்தில் தான் வெளியில் வரும் என்பதால் இந்த சமயத்தில், திருவிழா நடைபெறுகிறது

மின்மினி பூச்சிகள் அதிகமாக காணப்படும் இடங்களிலேயே இந்த திருவிழாக்கள் நடைபெறுகின்றன

மின்மினிப் பூச்சி திருவிழா எங்கெல்லாம் நடைபெறுகிறது?

புருஷ்வாடி :

மகாராஷ்டிராவின் பச்னாய் கிராமத்துக்கு அருகில் இருக்கிறது இந்த புருஷ்வாடி. மின்மினி பூச்சிகளை காண இது சிறந்த இடமாகும், மேலும் இங்கு மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகம்.

இங்கிருந்து ஹரிஷ்சந்திரகாட் என்ற இடத்துக்கு டிரெக்கிங் செல்லலாம்

சம்ராட்:

ரத்தன்காட் மற்றும் சந்தன் பள்ளத்தாக்குக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த சம்ராட் என்ற இடத்திலும் ஆயிரக்கணக்கில் மின்மினி பூச்சிகளை காணலாம். தவிர, இங்கு அஜோபா கோட்டை மற்றும் கல்சுபாய் சிகரம் அமைந்துள்ளன. இங்கும் டிரெக்கிங் செல்லலாம்

ராஜ்மாச்சி கோட்டை

17ஆம் நூற்றாண்டில் சத்ரபதி சிவாஜி மன்னனால் கட்டப்பட்ட இந்த கோட்டையானது, சாகச பிரியர்களுக்கும், குறிப்பாக மின்மினி பிரியர்களுக்கு ஒரு சொர்க்கம் என்றே சொல்லலாம்.

இருளில், இந்த மின்மினிப் பூச்சிகள் ஒளிரும் போது அங்கு நிற்பது நம்மை வேறு ஒரு உலகத்துக்கே கூட்டிச் செல்லும்

பந்தர்தாரா:

இதனையும் மின்மினிப் பூச்சிகளின் சொர்க்கப்புரி எனலாம். மகாராஷ்டிராவில் பெரிதும் அறியப்படாத மலைப்பகுதியான இது இயற்கை ஆர்வலர்களின் ஃபேவரெட் ஸ்பாட்

கோத்தலிகாட் கோட்டை:

இரவில் மின்மினிப் பூச்சிகள் இந்த இடத்தை ஆட்கொள்ளும். கோத்தலிகாட் கோட்டை இரவு நேர டிரெக்கிங்கிற்கும் ஃபேமஸ்

மின்மினி பூச்சி திருவிழா ஏன் கொண்டாடப்படுகிறது?

சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், மின்மினிப்பூச்சிகளின் மேம்பாடு மற்றும் இளம் தலைமுறையினருக்கு மின்மினிகள் குறித்து தெரியப்படுத்தவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?