How to become a travel writer?
How to become a travel writer? Twitter
இந்தியா

பயணம் செய்வதையே தொழிலாக மாற்றலாமா! Travel writer ஆவது எப்படி?

Priyadharshini R

பயணம் செய்வது பலருக்கும் பிடித்தமான விஷயமாக மாறிவிட்டது. பயணம் செய்வது மகிழ்ச்சி தருவதோடு மட்டுமில்லாமல் அவர்களின் மனநிலையே மாற்றுகிறது.

இந்த பயணம் ஒரு வெக்கேஷனாக மட்டுமே பார்க்கப்படுகிறது, அதுவே ஒரு வேலையாக அல்லது தொழிலாக இருந்தால் எப்படி இருக்கும்? இது உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தொழில் துறையாக இருக்கும்.

நீங்களும் ட்ராவல் ரைட்டராக மாறலாம், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

பயணம் குறித்து எழுதுவது என்பது உங்கள் பயணத் தேதிகள் மற்றும் பயணத் திட்டத்தை மட்டும் குறிப்பிடுவதில்லை, பல உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இதில் உள்ளன.

பயண வழிகாட்டி

ஒரு வழிகாட்டி புத்தகத்தை எழுதும் போது, பயணிகளுக்கான புவியியல் இருப்பிடம், சுற்றுலா தலங்கள், வரலாற்று மற்றும் கலாச்சார தகவல்கள் போன்றவை அதில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல்கள், பிற தங்குமிடங்கள், உணவகங்களின் மதிப்புரை ( review) போன்ற விவரங்களையும் நீங்கள் சேர்க்க வேண்டும்.

தகுதி

பயண எழுத்தாளர் ஆக உங்களுக்கு உள்ளூர் மொழி, தனித்துவமான இடங்கள், வெகுஜன தகவல் தொடர்பு தெரிந்திருப்பது அவசியம். பத்திரிகையில் பி.ஏ., ஆன்லைனிலும் பல்வேறு பயண எழுதும் படிப்புகள் உள்ளன, அதனை பயன்படுத்தி சிலவற்றை ஆராய்ந்துக்கொள்ளுங்கள்

வேலை வாய்ப்புகள்

அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் பயண எழுத்தாளர்களுக்கு அதிக தேவை உள்ளது. ஒரு எழுத்தாளராக இருப்பதால், வானொலி, வலைப்பதிவுகள் மற்றும் புத்தகங்கள் போன்ற பிற ஊடகங்களில் ஈடுபடுத்திக்கொள்ள முடியும்.

ஊதியம்

பயண ஆசிரியர்களுக்கான ஊதியம் ஊடகத்திற்கு ஊடகம், பிராண்டிற்கு பிராண்ட் மாறுபடும். நீங்கள் ஒரு ஃப்ரீலான்ஸராக வேலை செய்யலாம் அல்லது ஆன்லைன் பயணத் தளங்கள் அல்லது விமானத்தில் உள்ள பத்திரிகைகளுக்கு எழுதலாம். பயணப் புத்தகங்களை எழுதவும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

பயணம் செய்வது பிடிக்குமானால் இதனை உங்கள் தொழிலாக தேர்ந்தெடுத்து இதில் மின்னலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?