பிரபல டிசைனர் பிராண்டான ஹ்யூகோ பாஸ் பாத்ரூம் செப்பல்களை 9000 ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளது இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது.
தொழில்நுட்பங்கள் வளர வளர, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் கணிக்க முடியாத அளவு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் ஹ்யூகோ பாஸ் என்ற டிசைனர் நிறுவனம் தனது வெப்சைட்டில் ஒரு ஜோடி காலணிகள் ரூ.8,990 எனக் குறிப்பிட்டுள்ளது. இது மக்களின் கண்களில் படவே, பலரும் இதற்கு எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
காரணம், அதில் இருப்பது நாம் வீட்டிற்குள் பயன்படுத்தக் கூடிய, அல்லது குளியலறைக்கு பயன்படுத்தும் பாத்ரூம் செப்பல்கள் அவை. இந்த காலணிகளுக்கு 200 ரூபாய்க்கு மேல் நாம் செலவிடமாட்டோம். ஆனால் இந்த காலணிகளுக்கு 9000 ரூபாய் என்பது முதலாளித்துவ ஆதிக்கத்தினை குறிக்கிறது என்கின்றனர் இணையவாசிகள்.
இதன் ஸ்க்ரீன்ஷாட் டிவிட்டரில் பகிரப்படவே, அனைவரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் அந்த காலணியை ரூ.150க்கு விற்றால்போதும் என்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust