Humayun Tomb: இந்த முகலாய மன்னன் கல்லறையை பார்த்து தான் தாஜ் மஹால் கட்டப்பட்டதா? ட்விட்டர்
இந்தியா

Humayun Tomb: இந்த முகலாய மன்னன் கல்லறையை பார்த்து தான் தாஜ் மஹால் கட்டப்பட்டதா?

ஆண்டுதோறும், உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த கட்டிடக்கலை அற்புதத்தை பார்வையிட வருகை தருகின்றனர். இந்த கல்லறை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ.

Keerthanaa R

இந்தியா மிக நீண்ட வரலாறு கொண்ட நாடு. அதில் மன்னர் ஆட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மன்னராட்சி என்று எடுத்துக்கொண்டால், வரலாற்றை மாற்றியமைத்த, கலாச்சார மாறுதல்கள் மற்றும் கலையை நம் நாட்டிற்கு கொண்டுவந்த பெருமை முகலாய மன்னர்களுக்கு சேரும்.

இந்தியாவின் பல முக்கியமான நினவுச்சின்னங்கள் இவர்களது காலத்தில் கட்டப்பட்டது தான்.

டெல்லியில் அமைந்திருக்கும் மன்னர் ஹுமாயுனின் கல்லறையும் இந்த பட்டியலில் இடம்பெறும். ஆண்டுதோறும், உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த கட்டிடக்கலை அற்புதத்தை பார்வையிட வருகை தருகின்றனர்.

இந்த கல்லறை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ.

ஹுமாயுன் இந்தியாவை ஆண்ட இரண்டாவது முகலாய மன்னர். பாபரின் மகனான இவர் ஆப்கானிஸ்தான், வங்காளம், பாகிஸ்தான் மற்றும் வட இந்திய பகுதிகளை ஆட்சி செய்தார்.

இவரது கல்லறை தற்போதுள்ள டெல்லி நகரில் அமைந்துள்ளது. முகலாய கட்டிடக்கலையின் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு இந்த கல்லறை. இதனை ஹுமாயுனின் மனைவி ஹமீதா பானு பேகம் தான் எழுப்பினார். இதனை வடிவமைத்தவர் பிரபல பெர்சிய கட்டிடக்கலை நிபுணரான மிராக் மிர்சா கியாஸ் என்பவர்.

இந்த கல்லறையை கட்டிமுடிக்க கிட்ட தட்ட 7 ஆண்டுகள் ஆனது. 1565ல் தொடங்கி 1572ல் தான் கட்டிமுடித்தனர். 1993ஆம் ஆண்டு இதனை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரித்தது.

இது 4 முக்கிய சதுரங்களுக்கு மத்தியில் இருக்கும் சார்பாக் தோட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சதுரங்களை நீரோடைகள் பிரிக்கின்றன

இந்த கல்லறையின் முக்கிய கட்டிடம் ஒரு பெரிய சிவப்பு நிற மணற்கல்லால் ஆனது. இரண்டு அடுக்குகள் கொண்ட கட்டிடமாகும் ஹுமாயுன் கல்லறை.

எல்லா முகலாய கட்டிடங்கள் போலவும், மத்தியில் ஒரு பெரிய வெள்ளை நிற டோம் (குவிமாடம்) மற்றும் அதனைச் சுற்றி 4 சிறிய டோம்கள் உள்ளன.

இது ஹுமாயூன் மட்டுமல்லாது, மற்ற சில முகலாய மன்னர்களின் கல்லறைகளையும் தாங்குகிறது. இதில் ஹுமாயூனின் மனைவி ஹமீதா பானு பேகம் மற்றும் ஷாஜகானின் மூத்த மகனான தாரா ஷிகோவின் கல்லறைகளும் உள்ளன.

இந்த ஹுமாயூனின் கல்லறை வடிவம் பெரிதளவில் தாஜ் மஹாலின் வடிவமைப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியாக கூறப்படுகிறது. இவை இரண்டின் வடிவமைப்பில் நாம் சில ஒற்றுமைகளை காணமுடிகிறது.

அடுத்த முறை டெல்லி சென்று வந்தால் இந்த இடத்தை தவறவிடவேண்டாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?