IFS அதிகாரிக்கு கிடைத்த வேலை - சம்பளத்தைப் பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள்! Twitter @ParveenKaswan
இந்தியா

IFS அதிகாரிக்கு கிடைத்த வேலை - சம்பளத்தைப் பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள்!

Keerthanaa R

உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று வந்த கூறுஞ்செய்தியை டிவிட்டரில் பகிர்ந்து, என்ன செய்வதென்று குழப்பமாக இருக்கிறது என கேட்டுள்ளார் IFS அதிகாரி ஒருவர்.

நம் அலைப்பேசி எண்களுக்கு அவ்வப்போது, உங்களுக்கு வேலைக் கிடைத்திருக்கிறது, லோன் கிடைத்திருக்கிறது, லக்கி டிராவில் பணம் வென்றுள்ளீர்கள் போன்ற குறுஞ்செய்திகள் வரும். இது போலியான செய்திகள் என்றும், அவற்றை நம்ப வேண்டாம் எனவும் அரசு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

காரணம், இவ்வாறு நமக்கு வரும் குறுஞ்செய்திகளில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கின் மூலம் நம்மிடம் இருந்து பணம் கொள்ளையடிக்கப்படும். இது போன்று நிறைய சைபர் கிரைம் சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும், இந்த செய்திகளுக்கும் அதனை நம்பி ஏமாந்தவர்களுக்கும் குறைவில்லை.

இந்நிலையில் பர்வீன் கஸ்வான் என்ற ஐஎஃப்எஸ் அதிகாரி ஒருவருக்கும் இந்த குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பகிர்ந்த பர்வீன், "இறுதியாக வேலை கிடைத்துவிட்டது. ஆனல் இப்போது என்ன செய்வதென்று குழப்பமாக உள்ளது" என்று தலைப்பிட்டு பகிர்ந்திருந்தார்.

அவருக்கு வந்திருந்த செய்தியில், "உங்கள் ரெஸ்யூமை எங்கள் நிறுவனம் சரிபார்த்துவிட்டது. உங்களுக்கான சம்பளம் ரூ.9700" கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் தொடர்புகொள்ள சொல்லி அந்த செய்தி நிறைவடைந்திருந்தது. இந்த ஸ்க்ரீன்ஷட்டை அவர் பகிர்ந்ததிலிருந்து பலரும் தங்களுக்கு இவ்வாறான குறுஞ்செய்திகள் வருவதாக தெரிவித்து வருகின்றனர்.

ஒரு நாளைக்கு குறைந்தது இரு முறையாவது இது போன்ற குறுஞ்செய்திகள் வருவதாக சிலர் தெரிவித்தனர். மேலும், இந்த Spam செய்திகள் குறித்து ஒருவர் சைபர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்களோ, "இப்படிப்பட்ட செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கும். நீங்கள் ஏமாந்திருந்தாலோ, பணம் இழந்திருந்தாலோ மட்டுமே உங்களது புகாரை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்" என தெரிவித்து அவரது புகாரை மறுத்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்திருந்த அதிகாரி, பொது மக்களை எச்சரிக்கையோடு இருக்குமாறும் ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?