மேகாலயா முதல் கேரளா வரை : இந்தியாவின் கலாச்சார திருவிழாக்கள் - எங்கு எப்போது காணலாம்? Twitter
இந்தியா

மேகாலயா முதல் கேரளா வரை : இந்தியாவின் கலாச்சார திருவிழாக்களை எங்கு, எப்போது காணலாம்?

இங்கு இருக்கும் மலைகள், காடுகள், சமவெளிகள், கடற்கரைகள், சதுப்பு நிலங்கள், ஆற்று படுகைகள், பீடபூமிகள் என ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு மனித குழுவுக்குமாக தனித்துவமான கலாச்சாரங்கள் இருக்கின்றன. இந்திய கலாச்சாரங்களின் உச்சபட்ச வெளிப்பாடாக கொண்டாப்படும் திருவிழாக்கள் குறித்து காணலாம்.

Antony Ajay R

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என பாராட்டும் நாடு என்பதை நாம் அறிவோம். ஏனெனில் இந்தியா பலதரப்பட்ட புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது.

இங்கு இருக்கும் மலைகள், காடுகள், சமவெளிகள், கடற்கரைகள், சதுப்பு நிலங்கள், ஆற்று படுகைகள், பீடபூமிகள் என ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு மனித குழுவுக்குமாக தனித்துவமான கலாச்சாரங்கள் இருக்கின்றன. 

இந்த கலாச்சாரங்களின் உச்சபட்ச வெளிப்பாடாக கொண்டாப்படும் திருவிழாக்கள் குறித்துப் பார்க்கலாம். இந்தியாவில் நாம் ஒவ்வொருவரும் கண்டுகழிக்க வேண்டிய கொண்டாட்டங்கள் இதோ…

வடகிழக்கு இந்தியா

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 முதல் 10 வரை ஹான்பில் திருவிழா நடைபெறும். இங்குள்ள சில பழங்குடி மக்கள் ஹான்பில் பறவையை கடவுளாக எண்ணுவதனால் அதனை சிறப்பிக்க இந்த திருவிழாவை நடத்துகின்றனர். 

இந்த திருவிழாவைக் காண நாகாலாந்தில் உள்ள கிசாம எனும் இடம் புகழ்பெற்றது. திருவிழாவில் 7 சகோதரி மாநிலங்களில் இருந்தும் மக்கள் கலந்துகொண்டு ஆடல் பாடல்களை அரங்கேற்றுவர்.

10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் பழங்குடி மக்களின் கலைப்பொருட்கள் கண்காட்சியும் இருக்கும். இந்த திருவிழாவைக் காண சர்வதேச அளவில் சுற்றுலாப்பயணிகள் குவிவது வழக்கம். 

கொச்சி

கொச்சியில் டிசம்பர் மாதத்தில் கொச்சி முசிரிஸ் பினாலே என்ற திருவிழா நடக்கும். ஏப்ரல் வரை நடக்கும் இந்த திருவிழா சர்வதேச அளவில் கவனம் பெறும். 

பல ஊர்களில் இருந்து கலைஞர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள வருவது வழக்கம். கொச்சியில் உள்ள பழங்கால ஹோட்டல்கள் போன்ற இடங்களில் இந்த திருவிழா நடக்கும்.

சில அறைகளை எடுத்துக்கொள்ளும் கலைஞர்கள் அவர்களின் வீடியோக்கள் புகைப்படங்களையும் காட்சிப்படுத்துவர். 4 மாதம் நடப்பதனால் நிச்சயமாக இதனை அனைவரும் காண முடியும். 

குஜராத் 

குஜராத் மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக ரான் உத்சவ் எனும் விழா நடைபெறும். குஜராத்தில் இருக்கும் பல பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை இங்கு காணலாம்.

பழங்குடி மக்களின் ஆடல்பாடல்களும் இங்கு கண்டுகழிக்கலாம். இதுபோன்ற விழாக்காலங்களில் அந்தந்த ஊர்களுக்கு செல்ல விமான கட்டணம் அதிகமாக இருக்கும். 

குஜராத் திருவிழாவில் அரசு சுற்றுலாத்துறை மூலமாக செல்லும் போது செலவுகளைக் குறைக்கலாம்.

அனைத்து திருவிழாக்கள் பற்றியும் முழுமையாக தெரிந்துகொள்ள வீடியோவைக் காணலாம்...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?