video Twitter
இந்தியா

“எங்கள் உடைமைகளை விட்டுவிடுங்கள்” - டெல்லியில் புல்டோசர் முன் கெஞ்சும் பெண் | Video

Antony Ajay R

டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி திடீரென மேற்கொண்டது. இதனால் ஆக்கிரமிப்ப பகுதியிலிருக்கும் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கும் முன் ஜஹாங்கிரி பகுதியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் அந்த பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது.

வன்முறையைத் தொடர்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடத்தப்பட்டதாலும், அந்த பகுதியில் உள்ள மசூதியின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதாலும் இது தங்களுக்கு எதிரான அரசியல் பூர்வமான நடவடிக்கை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குப் போடப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குத் தற்காலிக தடை விதித்தார். மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

இதற்கிடையில் ஜஹாங்கீர்புரியைச் சேர்ந்த பெண் ஒருவர் அவர் கண்முன்னே அவரது வீடும் அதிலிருந்த உடைமைகளும் புல்டோசரால் இடிக்கப்பட்டு லாரியில் ஏற்றப்படுவதைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பரவியுள்ளது.

அந்த வீடியோவில் காவல்துறையினர் ஆயுதங்களுடன் பாதுகாக்க புல்டோசர் ஒன்று ஒரு சிறிய வீட்டை இடித்து அதிலிருந்த உடைமைகளையும் அள்ளி லாரியில் போடுகிறது. அதனைப் பார்த்து ஒரு பெண் "வீட்டை தான் இடித்துவிட்டீர்கள்; எங்கள் உடைமைகளையாவது விட்டு விடுங்கள்" என கெஞ்சி கதறுகிறார். இது போல இன்னும் சில வீடுகளும் கடைகளும் இடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கு வெறும் தூசி மட்டுமே எஞ்சியிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?