Vismaya Twitter
இந்தியா

விஸ்மயா வரதட்சணை வழக்கு - கணவர் கிரண்குமாருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்னென்ன?

Priyadharshini R

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் 22 வயது விஸ்மயா. இவர் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவருக்கும் அரசு ஊழியரான கிரண்குமாருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது விஸ்மயாவின் தந்தை, கிரண்குமாருக்கு வரதட்சிணையாக 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், சொகுசு கார், ரூ 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கியுள்ளார். அனைத்தையும் பெற்றுக் கொண்ட கிரண்குமாருக்கு ஆசை அடங்கவில்லை, இன்னும் வரதட்சணை வேண்டும் என்று மனைவி விஸ்மயாவை சித்ரவதை செய்து வந்துள்ளார்.

விஸ்மயா

இதுகுறித்து தனது தந்தையிடம் விஸ்மயா கூறிய நிலையில் அவரது தந்தை, கிரண்குமாரிடம் இதற்கு மேல் எங்களால் வரதட்சிணை கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டார்.

இதனால் கிரண்குமார், விஸ்மயாவை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. தினந்தோறும் கணவனின் சித்ரவதையை அனுபவித்த விஸ்மயா, ஒரு கட்டத்திற்கு மேல் வாழ்க்கையே வேண்டாம் எனக் கருதிக் கடந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை, கேரள மாநிலத்தை உலுக்கியதுடன், சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

விஸ்மயா

விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவர் அரசுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கொல்லம் கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் கொல்லம் கூடுதல் நீதிமன்றம் விஸ்மயா கணவர் கிரண் குமார் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது. இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.

அதில் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 12.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட விஸ்மயா குடும்பத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?