உலகின் அதிகமாக விவாகரத்து பெறும் நாடுகள் - இந்தியாவின் இடம் என்ன? canva
இந்தியா

உலகின் அதிகமாக விவாகரத்து பெறும் நாடுகள் - இந்தியாவின் இடம் என்ன?

Keerthanaa R

உலகிலேயே அதிக விவாகரத்துகள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த தரவரிசையில் இந்தியா இடம்பெறாத நிலையில், அதற்கு அடுத்ததாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியா கடைசி இடத்தில் இருக்கிறது

திருமணம் நடக்கிற வேகத்தை விட சீக்கிரமாக திருமண முறிவு ஏற்பட்டு விடுகிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் உறவில் நல்ல விஷயங்கள் இருப்பது போலவே கசப்பான சில நிகழ்வுகளும் இருக்கின்றன தான். அவற்றை சரியாக கையாண்டு கடந்து வருபவர்களின் திருமணம் நிலைக்கிறது, கடக்க இயலாதவர்களின் மணம் முறிகிறது.

சகித்துக்கொண்டு எந்த ஒரு உறவிலும், ஆணாகிலும், பெண்ணாகிலும் இருக்க வேண்டியதில்லை என்ற மன எண்ணம் இன்றைய தலைமுறையினருக்கு அதிகமாக வந்துவிட்டது.

அல்லது, திருமணம், குடும்பம், குழந்தைகள் போன்ற கமிட்மென்ட்டுகளுக்கு நாங்கள் தயாராக இல்லை என்று கூறும் இளைஞர் கூட்டமும் உண்டு.

இது போன்ற காரணங்களினால் விவாகரத்துகளும் அதிகரித்துவிட்டன. இந்நிலையில், அதிகமான விவாகரத்துகள் பதிவாகும் நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?

இந்தியாவின் விவாகரத்து விகிதம் வெறும் 1 சதவிகிதமாக பதிவாகி இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக வியட்நாம் உலகில் குறைவாக விவாகரத்துகள் நடக்கும் இரண்டாவது நாடாக இருக்கிறது.

போர்ச்சுகீச் நாடு உலகிலேயே அதிக டிவொர்ஸ்களை பெறும் நாடாக கண்டறியப்பட்டுள்ளது.

தகவல்களின்படி, போர்ச்சுகீஸில் 94 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. அடுத்த இடத்தில் ஸ்பெயின் நாட்டில் 85 சதவிகிதத்துடனும், பின்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் விவாகரத்து விகிதம் 50% யை தாண்டியும் உள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் 50 சதவீதம் பேர் விவாகரத்து செய்து கொள்கின்றனர் என்று தகவல் தெரிவிக்கிறது.

இவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாகவே விவாகரத்துகள் நடக்கின்றன. இதற்கு சட்ட அமைப்புகளே காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகக் குறைந்த அளவில் விவாகரத்து நடக்கும் நாடாக இந்தியா மதிப்பிடப்பட்டு இருப்பது பெருமை அளிப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் உண்மையில் நிலைத்திருக்கும் திருமணங்களில் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?