இந்தியா vs பாரத்: நம் நாட்டுக்கு பெயர் வைத்தது ஆங்கிலேயர்களா? விரிவான தகவல்கள்!
இந்தியா vs பாரத்: நம் நாட்டுக்கு பெயர் வைத்தது ஆங்கிலேயர்களா? விரிவான தகவல்கள்! AI Generated Image Represents Ancient India
இந்தியா

இந்தியா vs பாரத்: நம் நாட்டுக்கு பெயர் வைத்தது ஆங்கிலேயர்களா? விரிவான தகவல்கள்!

Antony Ajay R

இந்தியாவில் வாரம் தோறும் ஒரு சர்ச்சை எழுந்தவண்ணம் தான் இருக்கும். ஆனால் இந்தியா என்றே பெயரே கடந்த ஒரு வாரமாக சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

ஜி20 மாநாட்டின் அழைப்பிதழ் முதல் பிரதமரின் இருக்கை வரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்றே நாட்டின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆளும்கட்சியினர் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்டது என்கின்றனர். உண்மையில் இந்தியா என்ற பெயர் நம் நாட்டுக்கு வைக்கப்பட்டது எப்படி? இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் கதையை அறிந்துகொள்ளுங்கள்.

ஆங்கிலேயர்கள் இந்த நிலத்துக்கு வருவதற்கு முன்னரே இதனை இந்தியா என்றுதான் குறிப்பிட்டனர். சுதந்திரத்தின் போது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக இந்த நாட்டைப் பிரித்தனர்.

முஸ்லீம்களின் நாட்டுக்கு பாகிஸ்தான் என்பது தான் பெயர் என முன்னரே முடிவு செய்தார் ஜின்னா. ஆங்கிலேயர்கள் குறிப்பிடும் இந்தியா என்ற பெயரை நம் நாடு விரும்பாது என நினைத்தனர்.

Gandhi & Nehru

ஆனால் நேரு இந்தியா என்ற பெயரே நிலைக்கட்டும் என முடிவு செய்தார். இது ஜின்னாவும் பிறரும் எதிர்பாராத முடிவு. இந்த பெயரைத் தேர்வு செய்ததன் மூலம் முதன்மையான நாடாக உருவானது நம் நாடு. துணைக்கண்டம் என்ற மேலாதிக்கத்தைப் பெற்றது.

பாகிஸ்தான் தலைவர்கள் தங்கள் தவற்றை தாமதமாகவே உணர்ந்தனர். இந்தியா என்ற பெயரை இந்தியா உபயோகிக்கக் கூடாது என்றனர்.

இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வைத்தப் பெயர். இந்த பெயரைக் கொண்டிருப்பது அடிமை மனப்பான்மை என வலதுசாரிகள் கூறுகின்றனர்.

உண்மையில் இந்தியா என்ற பெயர் மிகநீண்ட காலமாகவே நம் நிலப்பரப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது. கி.மு. 5,6ம் நூற்றாண்டில் அகமேனியப் பேரரசு (தற்போதைய ஈரான்) டேரியஸ் என்ற மன்னரால் ஆழப்பட்டது.

அவர் காலத்து கல்வெட்டு ஒன்றில் அவர் 'இந்தியா' வரை கைப்பற்றியதாக கூறப்பட்டுள்ளது.

கி.மு.நான்காம் நூற்றாண்டில் கிரேக்க பயணி மெகஸ்தனிஸ் இண்டிகா என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்தியாவைப் பற்றி ஓரளவு அறிந்திருந்த ஒரே கிரேக்கர் இவர் மட்டுமே. இவரது நூலில் இந்தியா என்றே நம் நாட்டின் நிலப்பரப்பைக் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே இந்தியா என்ற நாடு பிறந்துவிட்டதை நாம் அறிகிறோம்.

இந்தியா என்ற வார்த்தையின் மூலம் சிந்து நதி என்பது உறுதி. சிந்து என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் வழங்கப்பட்டாலும் 'ஆறு' என்பது ஏற்கப்பட்ட ஒன்று.

சிந்து என்ற சொல் பெர்ஷிய மொழிக்கு மாறும் போது அதன் முதல் எழுத்தான S மாறி H ஒலியில் திரிகிறது. உதாரணமாக போதை பானமான சோம பெர்ஷிய மொழியில் ஹோம என மாறுவதைப் போல.

இந்த வார்த்தை பிற ஐரோப்பிய மொழிகளுக்கு செல்லும் போது H திரிந்து 'இந்த்' ஆக மாறியது. இப்படித்தான் ஐரோப்பியர்கள் நம் நாட்டை இந்தியா என அழைக்கத் தொடங்கினர்.

அதே நேரம் அரேபிய மற்றும் பெர்ஷிய பகுதிகளில் H ஒலியிலேயே வழங்கப்பட்டு வந்தது. பின்னாளில் ஹிந்துஸ்தான் என்ற பெயர் நம் நாட்டுக்கு வழங்கப்பட்டது அங்கிருந்து தான்.

பாபர், அக்பர் போன்ற இஸ்லாமிய அரசர்கள் நம் தேசத்தை ஆண்டபோது இந்துஸ்தான் என்றே குறிப்பிட்டனர்.

ஐரோப்பியர்கள் 'இந்தியா' என்ற தேசத்தைத் தேடி செல்லும் போது அமெரிக்கத் தீவுகளை அடைந்தனர். கொலம்பஸ் அங்குள்ள மக்களுக்கு இண்டீயோஸ் எனப் பெயரிட்டார். செவ்விந்தியர்கள் ஏன் 'இந்தியர்கள்' என அழைக்கப்படுகின்றனர் என்ற சந்தேகமும் நமக்கு இப்போது நீங்கியிருக்கும்.

From 'India' to 'Bharat'? The Fascinating Journey of the Name 'India'

17ம் நூற்றாண்டில் கிழக்கு நோக்கி புறப்பட்ட எல்லா வர்த்தகர்களும் இந்தியாவில் இருந்து உருவான பெயரையே பயன்படுத்தினர்.

கிழக்கிந்திய கம்பேனி இந்தியாவில் வலுவாக காலூன்றிய இந்த மாபெரும் நிலப்பரப்பு முழுவதும் இந்தியா என அழைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.

இந்தியா VS பாரதம்

பாரதம் என்ற சொல் மகாபாரதத்தில் வரும் பரத மன்னன் ஆண்ட பகுதியைக் குறிக்கும். இராமனின் தம்பியான பரதனின் நாடு என்றும் பொருள்படும்.

நியூஸ்சென்ஸுக்கு நேர்காணல் அளித்த அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகரும் அரசியல் விமர்சகருமான திரு.பொன்ராஜ், "பாரதம் என்ற பெயர் ஒரு மன்னர் ஆண்ட குறிப்பிட்ட நிலத்தை மட்டுமே குறிக்கும். பரதன் அயோத்தியை தலைநகரமாக கொண்டு ஆண்டவர்.

பரதன் ஆண்ட உத்தரபிரதேசம் உள்ளிட்ட இந்தியை முதன்மை மொழியாகப் பேசக்கூடிய பகுதிகளை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும். இராமன் ஆண்ட நாடு என்றால் இராவணன் ஆண்ட பகுதிகளும் நம் நாட்டில் இருக்கிறதே!

இந்தியா என்ற பெயர் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது. பாரதம் ஒருசார்பானது" எனக் கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?