Sarna: பழங்குடி மக்கள் மதத்துக்கு மத அங்கீகாரம் வழங்கப்படுமா? - விரிவான தகவல்கள்! Twitter
இந்தியா

Sarna: பழங்குடி மக்கள் மதத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படுமா? - விரிவான தகவல்கள்!

சர்னா மதத்தில் சிலை வழிபாடு கிடையாது. வர்ணாசிரம தர்மத்தை கடைபிடிப்பதில்லை. தாங்கள் தனித்துவமான மதத்தை பின்பற்றுவதாகக் கூறியுள்ளனர்.

Antony Ajay R

பிரதமர் நரேந்திர மோடி சர்னா மதத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றது.

வரும் நவம்பர் 15ம் தேதி பிர்சா முண்டா பிறந்தநாளை முன்னிட்டு குந்தி மாவட்டத்தின் உலிகட்டு என்ற இடத்துக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி.

ஜார்கண்ட் மாநிலம் உருவான நாளான அன்று, சர்னா மதத்தை அங்கீகரிக்க வேண்டும் இல்லை என்றால் தீக்குளிப்போம் என இரண்டு பழங்குடி மக்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்னா என்பது என்ன?

ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்காளம், பீகார் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை உள்ளடக்கிய சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் பின்பற்றும் வழிபாட்டுமுறை சர்னாவாகும்.

ஆனால் சர்னாயிசத்துக்கு மத அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை.

சர்னா மதத்தின் பழக்க வழக்கங்கள் என்ன?

சர்னா என்பது இயற்கையை வழிபடுவதாகும், "தண்ணீர், காடு, நிலம்" ஆகியவற்றை வணங்குகின்றனர். மலைகளையும் மரங்களையும் வணங்குகின்றனர். வனங்களை பாதுகாக்க நினைக்கின்றனர்.

சர்னா மதத்தில் சிலை வழிபாடு கிடையாது. வர்ணாசிரம தர்மத்தை கடைபிடிப்பதில்லை. தாங்கள் தனித்துவமான மதத்தை பின்பற்றுவதாகக் கூறியுள்ளனர்.

சர்னா மதம் ஏன் அங்கீகரிக்கப்பட வேண்டும்?

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 50 லட்சம் பழங்குடி மக்கள் சர்னா மதத்தை பின்பற்றுவதாகக் கூறியுள்ளனர். 2020ம் ஆண்டு ஜார்கண்ட் சட்டமன்றத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சர்னா தர்மக் குறியீட்டை சேர்க்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரென் சர்னாவை மதமாக அங்கீகரிக்கும் முடிவு மத்திய அரசில் நிலுவையில் உள்ளதாக சமீபத்தில் கூறியிருக்கிறார்.

பழங்குடி மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை நிலைநாட்டவும் பிற மதத்தவர்களிடம் இருந்து அவர்களை வேறுபடுத்தவும் சர்னா மதத்தை அங்கீகரிப்பது அவசியம் எனவும் அவர் பேசியிருக்கிறார்.

பழங்குடி மக்களின் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க சர்னா மதம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது பழங்குடி மக்களின் கருத்தாக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?