Indian Railways: டிக்கெட் எடுப்போம், ஆனால் ட்ரெயினில் பயணிக்க மாட்டோம் - ஒரு விநோத கிராமம் Twitter
இந்தியா

Indian Railways: டிக்கெட் எடுப்போம், ஆனால் ட்ரெயினில் பயணிக்க மாட்டோம் - ஒரு விநோத கிராமம்

NewsSense Editorial Team

வட இந்தியர்கள் ட்ரெயினில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கிறார்கள் என்று வெறுப்பு பேச்சுகளும், காணொளிகளும் பரவும் இந்த சூழலில், டிக்கெட் எடுத்தும் ட்ரெயினில் பயணிக்காத மக்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

என்ன, ஏன், எங்கே?

ட்ரெயினில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்கள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன் சில சமயம் நீங்களே கூட ட்ரெயினில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்திருக்கக் கூடும். ஆனால், இங்கு சிலர் ட்ரெயின் டிக்கெட் எடுக்கிறார்கள் ஆனால் அதில் பயணம் செய்வது இல்லை. ஏன் என்ற காரணம் தெரியுமா?

உத்தர பிரதேசம் ப்ரக்யராஜில் தயால்பூர் என்ற ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. இங்குதான் மக்கள் இந்த காரியத்தை செய்கிறார்கள்.

இதற்கான காரணம் கொஞ்சம் புதிரானது மற்றும் நெகிழ்வானது.

அதுவொரு நேரு காலம்

இந்திய பிரதமராக இருந்த நேரு ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியிடம் தயால் பூரில் ஒரு ரயில்வே ஸ்டேஷனை ஏற்படுத்த கூறி வலியுறுத்தினார். 1954 ஆம் ஆண்டு ரயில்வே ஸ்டேஷனும் ஏற்படுத்தப்பட்டது. ஏறத்தாழ 50 ஆண்டுகள் அது செயல்பட்டது.

ஆனால், 2006 ஆம் ஆண்டு அந்த ஸ்டேஷன் மூடப்பட்டது. குறைந்தபட்ச வருவாய் கூட அது ஈடவில்லை என்பதுதான் இந்த மூடுவிழாவுக்கு சொல்லப்பட்ட காரணம்.

ரயில் நிலையத்தை மூடலாம்

இது தொடர்பாக பேசிய மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு சேகர் உபத்யாயா, “குறைந்தபட்ச வருவாய் கூட ஒரு ரயில் நிலையம் ஈட்டவில்லை என்றால் அந்த ரயில்வே நிலையத்தை மூடலாம், பிரான்ச் லைனில் 25 டிக்கெட்டுகளும், ட்ரென்க் ரூட் லைன்களில் 50 டிக்கெட்டுகளும் குறைந்தபட்சம் விற்க வேண்டும். அது இல்லாத போது ரயில் நிலையத்தை மூடலாம்.” என்றார்.

நீண்ட மக்கள் போராட்டத்திற்கு பிறகு, 2022 ஆம் ஆண்டு அந்த ரயில் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் ஒப்புக் கொண்டது. ஆனால், பெரும்பாலான ரயில்கள் அங்கு நிற்பதில்லை.

இப்படியான சூழலில் மீண்டும் அந்த ரயில்வே நிலையம் மூடுவிழா காணுவதை மக்கள் விரும்பவில்லை.

இதற்காகதான் டிக்கெட் வாங்குகிறோம்

“இந்த ரயில்வே நிலையம் மீண்டும் மூடிவிழா கண்டுவிடக்கூடாது. அதற்காகதான் நாங்கள் பயணம் செய்கிறோமோ இல்லையோ, டிக்கெட்டிகளை வாங்குகிறோம். பெரும்பாலான ரயில்கள் இங்கு நின்று சென்றால். எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.” என்கிறார் உள்ளூர்வாசியான பிரபாகர் சிங்.

“இந்த வழித்தடத்தில் செல்லும் ஒரே ஒரு ரயிலால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால், இந்த வழித்தடத்தில் வேறு சில ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதனை மக்கள் டிக்கெட் மட்டும் எடுப்பதன் மூலம் அரசுக்கு சொல்ல விரும்புகிறார்கள்.” என்கிறார் ரயில்வே ஆப்ரேட்டரான புனித் சிங்.

2022 ஆம் ஜனவரி மாதம் இந்த ரயில்வே நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு மாதம் 700 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்று இருக்கின்றன. ஆனால், இப்போது அதுவும் சரிய தொடங்கியிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?