தம்பதியர் Canva
இந்தியா

அட்வென்சர் ஹனிமூன் செல்ல வேண்டுமா? இந்த காடுகளை ட்ரை பண்ணுங்க | Travel

ஹனிமூனில் கொஞ்சம் திரில் கலக்கும் போது பயணம் சுவாரஸ்யமானதாகிறது. காதலும் அதிகமாகிறது. சரி எந்தெந்த காடுகளுக்குச் செல்லலாம்?. இந்தியாவிலிருக்கும் சுற்றுலாவுக்கு ஏற்ற சிறந்த காடுகள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.

Antony Ajay R

ஹனிமூன் என்றால் ரொமான்டிக்கான கடற்கரைகள், குளிர்பிரதேசங்கள் மட்டும் தான் செல்ல வேண்டுமா? இந்த நிலையெல்லாம் மாறிவிட்டது. அட்வென்சர்களை விரும்பும் தம்பதிகள் செல்வதற்குக் காடுகள் தான் சரியான சாய்ஸ். கொஞ்சம் திரில் கலக்கும் போது பயணம் சுவாரஸ்யமானதாகிறது. காதலும் அதிகமாகிறது. சரி எந்தெந்த காடுகளுக்குச் செல்லலாம்?. இந்தியாவிலிருக்கும் சுற்றுலாவுக்கு ஏற்ற சிறந்த காடுகள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.

கபினி

கபினி, கர்நாடகா

கர்நாடக மாநிலம் நாகர்ஹோலே தேசிய பூங்காவிற்கு உட்பட்டது கபினி வனப்பகுதி. இங்குப் புலி, கரடி எல்லாம் இருந்தாலும் பாதுகாப்பாகச் சென்று வர முடியும். இங்கு ரொமான்டிக்கான ரெஸார்ட்களும் இருக்கின்றன. இயற்கை அழகை ரசித்தவாறு காட்டுப்பகுதிக்குள் நடைப்பயணம் செல்வது மனதுக்கு இடமளிக்கும். ஆற்றுக்கரை, அணைக்கட்டு என்று சுற்றிப்பார்க்கவும் இங்குப் பல இடங்கள் உள்ளது.

துத்வா

துத்வா, உத்திர பிரதேசம்

உத்திரபிரதேசம் மாநிலம் துத்வா காடுகள் இயற்கை ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய இடம். உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் காட்டில் நேருக்கு நேராகப் புலிகளின் நடவடிக்கையைக் காணமுடியும். நவம்பர் முதல் மார்ச் மாதம் இந்த காடுகளுக்குச் செல்ல ஏற்ற காலமாக இருக்கும். உங்கள் ஹனிமூன் அந்த மாதங்களில் அமைந்தால் நிச்சயமாக இந்த காடு உங்கள் ஹனிமூனை மறக்க முடியாததாக ஆக்கும்.

ஜிம் கோர்பெட்

ஜிம் கோர்பெட், உத்திரகாண்ட்

இங்கும் புலிகளைப் பார்க்க முடியும். சாகசங்களை விரும்பும் தம்பதியாக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக இந்த காட்டுக்கு ஒரு விசிட் அடிக்கலாம். உங்களைச் சுற்றியிருக்கும் இயற்கையை ரசித்து ஹனிமூன் நாட்களை அழகாக்கிக்கொள்ள இந்த காடுகள் சிறந்த எடுத்துக்காட்டு.

சாத்புரா

சாத்புரா, மத்தியப்பிரதேசம்

மிக அழகான, அமைதியான, ரொமான்டிக்கான ஹனிமூன் நினைவுகளை விரும்புபவரா நீங்கள்? எனில் சாத்புராவுக்கு உங்கள் பட்டியலில் மின்னிடம் கொடுக்கலாம். இங்கிருக்கும் இயற்கைக் காட்சிகள் காணக்கிடைக்காதவை. பாய்ந்தோடும் ஆறுகள், பிரம்மாண்டமான மலைகளை இங்குக் கண்டுகளிக்கலாம்.

ரந்தம்போரே தேசிய பூங்கா

ரந்தம்போரே தேசிய பூங்கா, ராஜஸ்தான்

ராஜஸ்தான் என்றால் பாலைவனம் தான் நமக்கெல்லாம் நியாபகம் வரும். ஆனால், ரந்தம்போரே இந்தியாவிலுள்ள அழகான காடுகளில் ஒன்று. இங்குள்ள உயர்தர விடுதிகளில் தங்கி காட்டை ரசிக்கலாம். சிறிய காட்டுப்பயணங்களும், அவ்வப்போது கண்ணில் படும் விலங்குகளும் காட்டிற்கே உரியப் பச்சை நிறமும் உங்கள் தேன்நிலவை இன்னும் இனிமையாக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் வங்காள புலி ஏரியில் சுத்தமான தண்ணீர் பருகுவதை நேரடியாகப் பார்க்க முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?