இந்தூர் : இந்தியாவின் சுத்தமான நகரமாக இருப்பதன் ரகசியம் என்ன? Twitter
இந்தியா

இந்தூர் : இந்தியாவின் சுத்தமான நகரமாக இருப்பதன் ரகசியம் என்ன?

Antony Ajay R

மத்தியபிரதேசம் மாநிலத்தில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரம் இந்தூர். தொடர்ந்து 6 ஆண்டுகளாக இந்தியாவின் தூய்மையான நகரமாக திகழ்கிறது.

சுத்தத்தைப் பேணிக்காக்க பல வழிமுறைகள் இங்கு கையாளப்படுகின்றது. அதில் முக்கியமானது கழிவுகள் மேலாண்மை.

குப்பைகளை எப்படி அகற்றுவது என்று சிந்திப்பதை விட அதை எப்படி மீண்டும் பயனுள்ள பொருளாக மாற்றுவது என்பது குறித்து சிந்திப்பது தான் இந்தூரின் சிறப்பு.

இந்தியாவின் சுத்தமான நகரம் என்ற பட்டம் இந்தூரை ஒட்டிக்கொண்டிருப்பது ஏன் எனக் காணலாம்.

இந்தியாவில் 1 லட்சத்தை விட அதிகமாக மக்கள்தொகை இருக்கும் தூய்மையான நகரங்கள் என்ற பட்டியலில் இந்தூரை தொடர்ந்து, சூரத் மற்றும் நாவி நகரங்கள் முதலிடத்தில் இருக்கின்றன.

இந்தியாவின் முதல் 7-ஸ்டார் குப்பை இல்லாத நகரம் இந்தூர். குப்பை உருவாக்காமல் ஒருவரால் வாழ முடியாது தானே?

இந்தூரில் வசிக்கும் 35 லட்சம் மக்கள் ஒவ்வொரு நாளும் 1,115 மெட்ரிக் டன் குப்பைகளை உருவாக்குகின்றனர்.

எனினும் குப்பை இல்லாத தலைநகராக விளங்க அதன் குப்பைகளை அந்த நகரம் எப்படி மேலாண்மை செய்கிறது?

கழிவுகளைப் பிரித்தல்

இந்தூர் மாநகராட்சி அலுவலகம் கூறுவதன் படி, மாவட்டம் முழுவதும் 850 வாகனங்கள் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றன.

வீடுகளிலும் வணிக வளாகங்களிலும் அலுவலங்களிலும் குப்பைகளை சேகரிக்கும் இந்த வாகனங்கள் கழிவுகளை 4 வகையாக பிரித்துக் கொட்டும் படி தனித்தனி அடுக்குகளைக் கொண்டிருக்கும்.

இந்தூர் துப்புரவு வாகனம்

அந்த குப்பைகளை மொத்தம் 6 பிரிவாக பிரிக்கின்றனர். ஈரமானவை, எலக்ட்ரானிக்ஸ், பிளாஸ்டிக், பிளாஸ்டிக் அல்லாதவை, உயிரி மருந்துகள், ஆபத்தானவை.

இந்தூரை சுத்தமாக வைக்க 8,500 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

உயிரி எரிவாயு

நகரம் முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட ஈரமான கழிவுகளை வைத்து உயிரி எரிவாயுவைத் தயாரிக்கின்றனர். மாட்டுச்சாணம் உள்ளிட்ட எந்த கரிமப் பொருளைக்கொண்டும் இதனைத் தயாரிக்க முடியும்.

இந்த உயிரி எரிவாயு மூலம் இந்தூரில் 150 பஸ்கள் செயல்படுகின்றன. இது சாதாரண இயற்கை எரிவாயுவை விட மலிவானது.

இந்த உயிரி எரிவாயுவைத் தயாரிக்கும் நிறுவனத்துக்கு குப்பைகளை வழங்குவதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு 2.52 கோடி சம்பாதிக்கிறது இந்தூர் அரசு.

தவிர கார்பன் வரவுகள் மூலம் 8.5 கோடி சம்பாதிக்கிறது. இதர வழிகளையும் சேர்த்து ஆண்டு குப்பை வழியாக மட்டுமே இந்தூருக்கு 14.45 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

பல தசாப்தங்களாக குவிந்துகிடந்த 15 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளை அகற்றியதன் மூலம் 400 கோடி ரூபாய் மதிப்புடைய 100 ஏக்கர் நிலத்தை இந்தூர் மீட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlustத்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?