Interesting facts about India Twitter
இந்தியா

நிலவில் நீர் இருப்பதை முதலில் கண்டுபிடித்து இந்தியாதானா? பலரும் அறியாத சுவாரஸ்யங்கள்!

இப்படி பழமைக்கு பெயர் போன நமது நாட்டில் பல புதுமையான, அறியப்படாத விஷயங்களும் இருக்கிறது. இதனால், நமது நாட்டை அண்டை நாட்டு மக்களும் வியந்து பார்ப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லையே.

NewsSense Editorial Team

இந்தியாவைப் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் மற்ற நாட்டினருக்கு உடனடியாக ஞாபகத்துக்கு வருவது நம் நாட்டின் கலாச்சாரங்கள், கலைகள், பாரம்பரியம் மற்றும் அதைச் சார்ந்த பழமையான விஷயங்கள் தான்.

இதனைப் பற்றி உலகத் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படி பழமைக்கு பெயர் போன நமது நாட்டில் பல புதுமையான, அறியப்படாத விஷயங்களும் இருக்கிறது. இதனால், நமது நாட்டை அண்டை நாட்டு மக்களும் வியந்து பார்ப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லையே.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ஸ்ரீநகரில் மிதக்கும் தபால் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகளவு மழை பொழியக்கூடிய ஒரு மாநிலம் மேகாலயா என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இம்மாநிலத்தில் உள்ள காசி மலைப்பகுதியைச் சேர்ந்த மவ்ஸின்ராம் கிராமம் மற்றும் சிரபுஞ்சி ஆகியவை அதிக மழைபொழிவைக் கொண்ட இடங்களாகும்.

இந்தியாவில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப் பெரிய மைதானம் ஆகும். ஆனால், உலகின் மிக உயரமான மைதானமும் இந்தியாவில் தான் உள்ளது.

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள செயில் கிரிக்கெட் மைதானம் மலைப்பகுதியில் இருந்து சுமார் 2,444 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

விளையாட்டுத் துறையை பொறுத்தவரை, உலகளவில் நடத்தபட்ட கபடிப் போட்டிகளில் இதுவரை இந்திய ஆடவர் அணி மற்றும் மகளிர் அணிகளே கோப்பையை வென்றுள்ளது. இது தவிர நிலவில் தண்ணீர் இருப்பதையே கண்டுபிடித்த நாடும் இந்தியா தானாம்.

அதாவது, 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இஸ்ரோ சந்திராயன் 1 விண்கலம் அதன் மினராலஜி பேப்பரை பயன்படுத்தி நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு அறிவியல் சுவாரஸ்யம் என்னவென்றால், நம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ராக்கெட் சிறியதாக இருந்ததால் அதனை சைக்கிள் மூலம் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் தும்பா ஏவுதளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

உலகில் முதன் முதலாக யானைகளுக்கு ஸ்பா வைத்த நாடும் இந்தியா தான். அந்த வகையில், கேரளாவில் உள்ள புன்னத்தூர் கோட்டா யானை புத்துணர்ச்சி மையத்தில் யானைகளுக்கு ஸ்பா வசதி செய்து கொடுக்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிகளவு மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்களாம். அதாவது, ஒட்டுமொத்த மக்கள் தொகையை வைத்து கணக்கிடுகையில் மொத்தம் 125 மில்லியன் இந்தியர்கள் ஆங்கிலத்தை உபயோகிக்கிறார்கள்.

இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன மற்றும் வங்க தேசத்தின் தேசிய கீதமான அமர் சோனார் என்ற பாடலை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர் ஒருவரே.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?