Ladakh Twitter
இந்தியா

Leh Ladakh போறீங்களா? இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ள இந்த திட்டத்தை பாருங்கள் IRCTC

NewsSense Editorial Team

புது வெள்ளை மழை இங்குப் பொழிகின்றது.... என்கிற இனிய தமிழ் பாடலுக்கு பொருத்தமான இடம் லே மற்றும் லடாக் என்றால் மிகை இல்லை. சொர்கத்தின் ஒரு பகுதி அப்படியே புவியில் வந்து விழுந்தது போலிருக்கும் இந்த இடத்துக்குச் செல்ல வேண்டும் என நம்மில் பலரும் கனவு கண்டு வருகிறோம்.

அக்கனவை நனைவாக்க, இந்திய ரயில்வேயின் IRCTC ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த பயணத்தில் IRCTCயிடம் ஒரு நபருக்கு 44,200 ரூபாய் பணம் செலுத்தினால் போதும். சென்னையிலிருந்து லே லடாக் சென்று மீண்டும் சென்னை வந்து சேரும் வரை உணவு, இருப்பிட வசதி, உள்ளூர் பயண வசதிகள் என எல்லாமே ஐ ஆர் சி டி சி செய்து கொடுக்கிறார்கள்.

ஆனால், செல்லும் இடத்தில் ஒரு ஒட்டக பயணம் மேற்கொள்ள வேண்டும் போன்ற செலவுகளை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல டெல்லி விமான நிலையத்தில் லான்ச் வசதிகளைப் பெற வேண்டுமானாலும் நாம் தான் தனியாக பணம் செலுத்த வேண்டும்.

Ladakh

வீடியோ எடுப்பதற்கான கட்டணம், குடிநீர் வசதிகள், நினைவிடங்கள் & வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்குச் செல்வதற்கான நுழைவுக் கட்டணங்களை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சென்னையில் இருந்து வரும் 29 ஜூன் 2022 அன்று விமானத்தில் புறப்பட்டால், 5 ஜூலை 2022 அன்று மீண்டும் சென்னை வந்திறங்கும் வரை (6 இரவு / 7 பகல்) பயணத் திட்டங்கள் இருக்கின்றன. பயணம் விமானத்திலேயே திட்டமிடப்பட்டிருக்கிறது.

லே, ஷம் பள்ளத்தாக்கு, நுப்ரா, டுர்டுக், பங்காங், சங்க்லா என பல இடங்களும் அதனைச் சுற்றியுள்ள முக்கியச் சுற்றுலா தளங்களும் திட்டத்தில் இருக்கின்றன.

IRCTCயின் சென்னையிலிருந்து லே லடாக் சுற்றுலா செல்வது தொடர்பாக மேலதிக விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்: https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SMA28

சந்தேகங்களுக்கு கீழ் காணும் நபர்களை தொடர்பு கொள்ளலாம்.

IRCTC-Chennai

Mr. Thiagarajan - 08287931973/Email - thiagarajan6438@irctc.com

Mr. Yokesh - 09003140682/Email-irctcraintree@gmail.com

IRCTC-Madurai: Mr.Rajesh - 08287931977

IRCTC-Coimbatore: Mr.Mohan -09003140655

IRCTC-Trichy: Mr. Gowthaman-08287931974

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?