Kalpana Chawla: இவரது முதல் பெயர் என்ன தெரியுமா? கல்பனா என்ற பெயர் வந்தது எப்படி? ட்விட்டர்
இந்தியா

Kalpana Chawla: இவரது முதல் பெயர் என்ன தெரியுமா? கல்பனா என்ற பெயர் வந்தது எப்படி?

Keerthanaa R

விண்ணில் கால்பதித்த முதல் இந்திய வம்சாவளி பெண்ணான கல்பனா சாவ்லாவின் பிறந்த நாள் இன்று. இவர் தனது இரண்டாவது ஸ்பேஸ் மிஷன் முடிவடைவதற்குள்ளாகவே உயிரிழந்தார்.

கல்பனா சாவ்லாவின் பெருமைகளை வரலாறு இன்றும் பேசுகிறது. கல்பனா தனக்கான பெயரை தானே தேர்ந்தெடுத்துக்கொண்டார் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

பிரபல எழுத்தாளர் ஜாய் பட்டாச்சாரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கல்பனா சாவ்லா தனக்கான பெயரை தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட சுவாரஸ்ய கதையை பகிர்ந்திருந்தார்.

1962 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் பிறந்தார் கல்பனா. தி பெட்டர் இந்தியா அறிக்கையின்படி, கல்பனாவை அவரது குடும்பத்தினர் மான்ட்டோ என்று தான் அழைத்தனர்.

கல்பனா பள்ளியில் சேர்க்கப்படும் வரை அவரது பெற்றோர் பெயர் எதுவும் சூட்டவில்லை.

ஸ்கூலில் சேர்க்க கூட்டிச் செல்லப்பட்டபோது, பள்ளியின் தலைமையாசிரியர் பெற்றோரிடம் குழந்தையின் பெயரை கேட்டார்

கல்பனாவின் உறவினர், ஜியோத்ஸ்னா, சுனைனா, கல்பனா என மூன்று பெயர்களை குறிப்பிட்டு, இன்னும் எந்த பெயரை சூட்டுவது என்று முடிவாகவில்லை என்றார்.

தலைமையாசிரியர் அப்போது சிறுமியிடம் திரும்பி, “உனக்கு எந்த பெயர் வேண்டும்?” எனக் கேட்டார். சிறுமி சற்றும் தயங்காமல், கல்பனா என்றாள். கல்பனா என்ற வார்த்தையின் அர்த்தம் கனவு என்பதால் இந்த பெயர் தனக்கு பிடித்திருப்பதாக சிறுமி கல்பனா கூறியிருக்கிறார்.

சிறு வயது முதலே பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற கனவை அவள் கொண்டிருந்தாள். பெண் பிள்ளைகளுக்கு கல்வி என்ற உரிமை வழங்கப்படாத காலக்கட்டத்தில் பிறந்த கல்பனா, ஏரோனாட்டிகல் எஞ்சினியரிங் படித்து நாசாவில் கால்பதித்தார்.

விண்ணுக்கு சென்ற முதல் இந்திய பெண்மணி இவர் தான். 1997ல் ஒரு முறையும், 2003 ஒரு முறையும் மிஷனுக்காக இவர் விண்ணில் பறந்தார். 2003 ஆம் ஆண்டு இவர் மேற்கொண்ட இவரது இரண்டாவது ஸ்பேஸ் மிஷனே கடைசி பயணமாகவும் அமைந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?