India's first Meta-Influencer Twitter
இந்தியா

இந்தியாவின் முதல் Meta இன்ஃப்ளூயன்சர்: 2k கிட்ஸை கவரும் யார் இந்த கைரா?

Priyadharshini R

வளர்ந்து வரும் நவீன உலகில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. மனிதர்கள் செய்யும் வேலைகளுக்கு நிகராக அல்லது அவர்களுக்குப் பதிலாக டெக்னாலஜி வந்துவிட்டது.

டெக்னாலஜி வளர்ச்சி மூலம் வியாபாரமும் வளர்ந்து வருகிறது. தற்போது சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி பயனர்கள் இன்ஃப்ளூயன்சர்களாக மாறி வருகின்றனர்.

சோசியல் மீடியாவில் அதிக ஃபாலோவர்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமில்லாமல், மற்ற பயனர்களும் தற்போது ஒரு இன்ஃப்ளூயன்சராக மாறிவருகின்றனர்.

சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை, இன்ஃப்ளூயன்சர்கள் தங்கள் முத்திரையைப் பதிப்பது சாதாரணமான காரியம் அல்ல. ஆடைகள் மற்றும் அணிகலன்களை விளம்பரப்படுத்துவது முதல் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவது வரை, பலவகையான இன்ஃப்ளூயன்சர்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே லட்சக்கணக்கானோர் இன்ஃப்ளூயன்சராக வலம் வரும் நிலையில், இந்தியாவில் முதல் முறையாக விர்ச்சுவல் இன்ஃப்ளூயன்சராக கைரா என்ற 21 வயது இளம் பெண் தோற்றம் பலரது கவனத்தைப் பெற்று வருகிறது.

இன்ஸ்டாவில் 142k ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் ‘கைரா’ மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

கைரா எப்படி உருவானது?

இந்தியாவில் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சிங்கை செய்து வரும் ஒரு நிறுவனமாக ’டாப் சோசியல் இந்தியா’ செயல்பட்டு வருகிறது.

சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக இந்த டாப் சோசியல் இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்தியாவின் முதல் முறையாக மெடா இன்ஃப்ளூயன்சராக கைரா என்ற பெண் தோற்றத்திற்கு இந்த நிறுவனம் சமூகவலைத்தளங்களில் உயிர் கொடுத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் கைரா

கைராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடல்களை போல போட்டோஷுட், ரீல்ஸ், யோகா மற்றும் உடற்பயிற்சி செய்தல் போன்ற பல்வேறு விஷயங்களை வீடியோக்களாக மற்றும் புகைப்படங்களாகப் பதிவிடப்பட்டு வருகிறது.

மார்டன் உடைகளை அணிந்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பது, பாடலுக்கு நடனமாடுவது எனப் பல பொழுது போக்கு விஷயங்களையும் கைரா செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் கைரா, பிரபல முன்னணி நிறுவனமான boAt விளம்பரத்தில் நடித்துள்ளது. கைராவின் போஸ்ட்டுக்கு ஃபாலோவர்கள் கமெண்ட்களை வாரிவழங்கி வருகின்றனர்.

உலகின் மெடா இன்ஃப்ளூயன்சர்கள்

அமெரிக்காவில் Lil Miquela, தென் கொரியாவில் Rozy போன்று இந்தியாவில் மெட்டா இன்ஃப்ளூயன்சராக கைரா உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?