Real மௌக்லி NewsSense
இந்தியா

Real மௌக்லி: ஓநாய் வளர்த்த காட்டுச் சிறுவன் - அதிர வைக்கும் உண்மை கதை

NewsSense Editorial Team

2016 ஆம் ஆண்டு வெளிவந்த "தி ஜங்கிள் புக்" ஹாலிவுட் திரைப்படம் நினைவிருக்கிறதா?

குழந்தைகளிடம் பிரபலமான இப்படத்தில் மௌக்லி (அல்லது மோக்லி) எனும் சிறுவன் காட்டில் ஓநாய்கள் கூட்டத்தால் வளர்க்கப்படுவான். ஷேர் கான் எனும் புலி அவனை கொன்று விடுவதாக அச்சுறுத்தும். அந்தப் புலியிடமிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு சிறுத்தையும்,

ஒரு கரடியும் அவனுக்கு உதவி செய்யும். அவர்களின் உதவியால் அவன் அருகாமையில் உள்ள ஒரு மனிதர்கள் வாழும் இடத்திற்கு தப்பிச் செல்வான். மனதைக் கவரும் இந்தக் காட்டுச் சிறுவன் பாத்திரத்தை படைத்தவர் யார்?


மௌக்லி

மௌக்லி பாத்திரம் ருட்யார்ட் கிப்ளிங் எனும் ஆங்கில எழுத்தாளரின் கற்பனைப் படைப்பு. அவரது ஜங்கிள் புக் கதைகளில் அவன்தான் நாயகன். அவரது கதைப்படி அவன் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சியோனியில் உள்ள பென்ச் பகுதியைச் சேர்ந்த ஒரு காட்டுச் சிறுவன். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளி வந்த இந்த புத்தகம் பெரு வெற்றி பெற்றது.

பின்னர் தற்போது வரை இந்த சிறுவன் பல புத்தகங்களிலும், டி.வி.தொடர்களிலும், திரைப்படங்களிலும் நாயகனாக கொண்டாடப் படுகிறான்.

மௌக்லி உருவான கதை

சரி, இந்த மௌக்லி எனும் கற்பனைப் பாத்திரம் எப்படி உருவாக்கப்பட்டது? இந்தக் கேள்வி எழுந்தால் நீங்கள் யாருக்கும் தெரியாத தினா சனிச்சார் எனும் நபரைத் தேடிச் செல்ல வேண்டும். தினா சனிச்சார் எனும் உண்மையான மனிதர்தான் மௌக்லி எனும் கற்பனை பாத்திரத்திற்கு அடிப்படை.


காலத்தால் மறந்து போன இந்த தினா சனிச்சார் யார்?

தினா சனிச்சாரின் கதை பிரமிப்பாக இருந்தாலும் அவனது கதை மனதை உருக்கும் ஒரு சோகமான கதை. உத்திரப்பிரேதச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள காடுகளில் வேட்டையாளர் குழு ஒன்று பயணித்தது. அப்போது வேட்டையாடுபவர்கள், ஓநாய்கள் கூட்டம் ஒன்றில் நான்கு கால்களோடு ஒரு மனிதச் சிறுவன் ஊர்ந்து போனதைக் கண்டனர். அவன் அந்த ஓநாய் மந்தையுடன் ஒரு குகைக்குள் மறைந்து விட்டான்.

அவன்தான் தினா சனிச்சார். அப்போது அவனுக்கு பெயரெல்லாம் இல்லை. அந்த சிறுவனை ஓநாய்கள் வளர்த்தாக அந்த வேட்டையாடும் குழுவில் உள்ளவர்கள் நம்பினர். இது நடந்த ஆண்டு 1873. இவன் மட்டுமல்ல அக்காலத்தில் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட சிறுவர்கள் நான்கு பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

காட்டில் வளரும் குழந்தை எப்படி இருக்கும்?

சிறுவயதிலிருந்தே பெற்றோர் உள்ளிட்ட மனிதத் தொடர்புகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட குழந்தையாக அது காட்டிற்குள் சென்றடைகிறது. இதனால் மனிதக் கவனிப்பு, சமூகமாக வாழும் நடவடிக்கைகள், தொடர்பு கொள்ளும் மொழி போன்றவற்றில் சிறிதளவு அனுபவம் கூட இல்லாதவர்களைத்தான் காட்டின் குழந்தைகள் என்று அழைக்கிறோம்.



தினா சனிச்சாரை காப்பாற்றுதல்

சனிச்சாரை முதலில் கண்டுபிடித்த வேட்டையாடிகளும் அப்படித்தான் நம்பினர். அவனைக் கண்ட போது அவர்கள் அவன் இயற்கைக்கு மாறாக இருந்ததைக் கண்டனர். அதனால் காட்டு வாழ்விலிருந்து காப்பாற்றும் பொருட்டு அவனைத் தூக்கிச் செல்ல முடிவு செய்தனர். அதற்கு முன் அவனை தாய் போல காத்து வந்த பெண் ஓநாயைக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தனர்.

அதன் படி அந்த ஓநாய்க் கூட்டம் மறைந்திருந்த குகையின் வாயிலில் தீ மூட்டினர். இதனால் அங்கிருந்த அனைத்து ஓநாயகளும் தப்பி ஓடின. இப்படியாக அந்தச் சிறுவன் மீட்கப்பட்டான்.

பழக்கத்தில் மாற்றமில்லை

ஆனால் அந்தச் சிறுவனை மனித நாகரீகத்திற்கு திருப்புவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. அவன் ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்த்ரா மிஷன் எனும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பப் பட்டான். அங்குதான் அவனுக்கு தினா சனிச்சார் என்று பெயர் சூட்டப்பட்டது.

இருப்பினும் அவனுக்கு மனிதர்கள் பேசும் எந்த மொழியும் தெரியாது. அதை அவனுக்கு கற்றுக் கொடுக்கவும் முடியவில்லை. ஆடை ஆணிவதை அவன் ஒத்துக் கொள்ளவில்லை. தனது பற்களை கூர்மைப் படுத்தி பச்சை இறைச்சியை மட்டும் அவன் உண்ண விரும்பினான். இப்படியாக அவனை வளர்ப்பதில் அந்த ஆதரவற்றோர் இல்லத்து ஊழியர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்தனர்.

மனிதர்களிடம் பற்று இல்லை

தினா சனிச்சாரை குழந்தை உளவியலாளர் வேய்ன் டென்னீஸ் ஆய்வு செய்தார். தனது ஆய்வின் கருத்துக்களை அவர் அமெரிக்காவின் மனநல மருத்துவ இதழில் எழுதினார். அதில் தினாவிற்கு மனிதர்களிடம் சிறிதளவோ அல்லது எந்த வகையிலோ எந்தப் பற்றும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் அவனது உடல் வெப்பத்தையோ, குளிரையோ உணரவில்லை என்றும் கூறினார்.

டென்னீஸின் கூற்றுப்படி தினா சனிச்சார், இல்லத்தில் இருந்த மற்ற குழந்தைகளோடு எந்த விதமான பிணைப்பையும் உருவாக்கவில்லை.இப்படியாக மனிதனாக மாற முடியாத தினா சனிச்சார் தனது 34வது வயதில் இறந்தான். 1895 இல் காசநோய் காரணமாக அவன் இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் ஊகம் செய்தனர். ஆனால் இறப்பதற்கு முன்பு அவன் தனது உடையை சரியாக அணிவதற்கும் ஒரு தட்டில் வைத்து உணவைச் சாப்பிடுவதற்கும் கற்றுக் கொண்டான்.

சனிச்சார் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பாகத்தான் எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங்கின் "தி ஜங்கிள் புக்" வெளியானது. கற்பனையில் படைக்கப்பட்ட இக்கதைதான் இன்று வரை காட்டுக் கதைகளில் பிரபலமானது. ஆனால் அக்கதையின் முதன்மைப் பாத்திர உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த தினா சனிச்சாரின் வாழ்க்கை சோகமாக முடிந்து விட்டது. வயது 34 ஆனாலும் அவன் இறப்பதற்கு முன்பு வரை பெருமளவு காட்டு மனிதனாகவே இருந்தான்.

மௌக்லி பாத்திரம் திரைப்படம் மூலம் பிரபலமாகி விட்டது. ஆனால் தினா சனிச்சார் இன்று வரை பிரபலமில்லாத யாருமறியாத ஒரு அனாதையான காட்டுச் சிறுவன்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?