கடும் தட்டுப்பாடு காரணமாக தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், நுகர்வோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சில்லறை விலை கிலோவுக்கு ₹130 ஆகவும், மொத்த விற்பனை விலை கிலோவுக்கு ₹100 ஆகவும் தக்காளி விற்பனை ஆகிறது. அதிக வெப்பநிலை, குறைந்த உற்பத்தி, நாடு முழுவதும் தவறிய பருவ மழை ஆகிய காரணங்களால் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
கடந்த இரண்டு வாரங்களாக தக்காளி விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளது. தக்காளி மாற்றாக என்ன சமைக்கலாம் என மக்கள் எண்ணி வருகின்றனர்.
இந்த நிலையில் தக்காளி விற்கிற விலைக்கு அதனை கேட்காமல் கணவர் பயன்படுத்தியதாக மனைவி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
டிபன் சர்வீஸ் நடத்தும் சஞ்சீவ் பர்மன், தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.
வாக்குவாதத்திற்குப் பிறகு மகளுடன் மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர்களை கண்டுபிடிக்க முயன்று, பின் முடியாத பட்சத்தில் உதவிக்காக உள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்றிருக்கிறார் சஞ்சீவ்.
இது பற்றி சஞ்சீவ் கூறுகையில்,
தக்காளி பயன்படுத்துவதைப் பற்றி மனைவியிடம் ஆலோசனை கேட்காததால் அவர் கோபமடைந்தார்.
தான் சமைத்துக்கொண்டிருந்த காய்கறிப் பாத்திரத்தில் இரண்டு தக்காளியைப் போட்டதால் வாக்குவாதம் தொடங்கியதாகக் கூறினார். மூன்று நாட்களாக மனைவியிடம் பேசவில்லை என்றும், அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
போலீஸ் அதிகாரிகள் சஞ்சீவிடம், அவரது மனைவியை தொடர்பு கொள்வதாகவும், விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்றும் உறுதியளித்தனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust