Marikkal, the Kerala village that comes alive with lilies
Marikkal, the Kerala village that comes alive with lilies Twitter
இந்தியா

கேரளா: அல்லி மலர்களால் உயிர்ப்பிக்கப்படும் கிராமம் - மலரிக்கலில் என்ன அதிசயம்?

Priyadharshini R

இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக கேரளா திகழ்கிறது. பாரம்பரிய இடங்கள் முதல் அட்வென்சர் ஸ்பாட் வரை கேரளாவில் பார்க்க பல விஷயங்கள் இருக்கின்றன.

நம் பட்ஜெட்டுக்குள் அடங்கக் கூடிய பல இடங்களை கேரளா உள்ளடக்கியுள்ளது என்றே சொல்லலாம். இயற்கை ஆர்வலர்களும் மிக விரும்பும் மாநிலமான இங்கு இந்தியா மட்டுமல்லாது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

பிரபலமான சுற்றுலா இடங்களில் இருந்து விலகிய ஒரு இடத்திற்கு ஏங்குகிறீர்கள் என்றால், கேரளாவில் இருக்கும் ஒரு ரகசிய இடத்தை பற்றி சொல்ல போகிறோம். இந்த பதிவில் கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஒரு விசித்திரமான குக்கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.

மலரிக்கல் என்ற இந்த குக்கிராமம் மிகவும் கவர்ச்சிகரமான காட்சியை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

ஒவ்வொரு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இளஞ்சிவப்பு, வெள்ளை நீர் அல்லிகள் மற்றும் தாமரை மலர்களால் உயிர்ப்பிக்கும் 650 ஏக்கர் நெல் வயல்களின் தாயகமாக இது உள்ளது.

கொச்சி, ஆலப்புழா, திருவனந்தபுரம், மூணாறு ஆகியவை கேரளாவில் பார்க்க வேண்டிய மிகவும் பிரபலமான தேர்வுகளாக இருந்தாலும், கோட்டயத்தின் இந்த அழகிய கிராமத்தை நிச்சயம் பார்வையிட பரிந்துரைக்கிறோம்.

சுற்றுலாப் பயணிகள் சிறிய படகு மூலம் 100 ரூபாய் கொடுத்து இந்த லில்லி வயல்களைப் பார்வையிடலாம். ஆனால் வயல்வெளிகள் தனிப்பட்ட சொத்து என்பதால் அனுமதியில்லாமல் நுழையக் கூடாது.

இதற்கு முன்பு இந்த அற்புதமான பூக்கள், உலகம் அறியாமல் இருந்தது, சில சுற்றுலா பயணிகள் இந்த இடத்தின் புகைப்படங்களை சமூகவலை தளங்களில் வெளியிட்ட பிறகு மாநிலம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்த்து வருகிறது.

சூரிய உதயத்தில் பூக்கும் அல்லிகளின் இந்த வயல்களை நீங்கள் கண்குளிர காணலாம். அல்லி மலர்களுடன் நாளைத் தொடங்கி கிராமப்புறங்களில் சூரியன் மறையும் போது அந்த நாளை முடிக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

முடிவில்லாத நெல் வயல்களுக்கு நடுவே கிராமத்து வாழ்க்கையின் இனிமையை நீங்கள் அனுபவிக்கலாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?