Man boarded in Vande Bharat train for selfie ends up travelling from Rajahmundry to Vijayawada Twitter
இந்தியா

செல்ஃபி எடுக்க வந்தே பாரத் ரயிலில் ஏறிய நபர் : கடைசியில் 159 கி.மீ. பயணம் - Viral Video

செல்ஃபி எடுக்க வந்தே பாரத் ரயிலில் ஏறிய நபர், மீண்டும் இறங்க முயற்சித்தபோது தானியங்கி கதவு மூடியதால் அவர் விஜயவாடா வரை 159கிமீ பயணிக்க நேர்ந்துள்ளது.

Priyadharshini R

கடந்த ஜனவரி 15 ஆம் தேதியன்று ராஜமகேந்திரவரம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் ஏறியுள்ளார்.

காரணம் அவர் அந்த ரயிலில் பயணிக்க ஏறவில்லை மாறாக செல்ஃபி எடுக்க ஏறியுள்ளார்.

அந்த நபர் வந்தே பாரத் ரயிலை பார்த்து விட்டு அங்கு செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது கதவு தானாக மூடி ரயில் நகர ஆரம்பித்து விட்டது.

பின்னர் அந்த நபர் கதவை திறக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் கதவைத் திறக்க இயலவில்லை.

இதற்கிடையில் அங்கு அந்த டிக்கெட் பரிசோதகர் என்ன என்று கேட்க, தான் செல்ஃபி எடுக்க தான் ரயிலில் ஏறியதாக அவர் கூறினார். கதவை திறக்க செய்யவும் அந்த நபர் அவரிடம் வலியுறுத்தியிருக்கிறார்.

அப்போது அந்த டிக்கெட் பரிசோதகர் வந்தே பாரத் ரயிலில் இருப்பவை தானியங்கி கதவுகள், அவற்றை நாமாக திறக்க முடியாது.

ரயில் நிலையம் வரும்போது தாமாகவே திறந்து குறிப்பிட்ட நேரத்தில் மூடிக் கொள்ளும் என்று எடுத்துரைத்திருக்கிறார்.

டிக்கெட் எடுக்காமல் செல்ஃபிகாக ஏறிய அந்த நபர் 159 கி.மீ பயணம் செய்ய நேர்ந்தது. ரயில்வே ஊழியர்கள் அந்த நபருக்கு தகுந்த அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?