Flipkart  Pexels
இந்தியா

Flipkart: கேமிங் லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு வந்த கருங்கல் - ஷாக்கான வாடிக்கையாளர்!

Keerthanaa R

Flipkartல் லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு கருங்கல் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை டெலிவர் செய்துள்ளது நிறுவனம். இதை அவர் டிவிட்டரில் பகிரவே, அவருக்கு refund அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளம் flipkart. தீபாவளியை முன்னிட்டு நிறுவனம் ஆஃபர்களை அறிவித்திருந்தது. மங்களூருவை சேர்ந்த சின்மயா ரமணா என்பவர் Flipkartல் லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு டெலிவர் செய்யப்பட்டது ஒரு பெரிய கருங்கல், மற்றும் உபயோகமற்ற எலக்ட்ரானிக் பொருட்கள் (e-vast). இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரமணா, தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில்,"தீபாவளி ஆஃபரில் Flipkartல் லேப்டாப் ஆர்டர் செய்தேன். ஆனால் கைக்கு கிடைத்தது ஒரு பெரிய கல்லும் எலக்ட்ரானிக் கழிவுகளும். (கொடுமை)" என்று பகிர்ந்திருந்தார்.

மேலும் அடுத்த பதிவில், "எப்போதும் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய நான் flipkartஐ தேர்ந்தெடுத்ததற்கு இன்று வருந்துகிறேன். இவர்களது வாடிக்கையாளர் சேவை மோசமாக இருக்கிறது. புகார் அளித்தால், அதை ஏற்றுக்கொண்டு கஸ்டமருக்கு உதவ நிறுவனம் முன்வருவதில்லை. என்னைப்போல உங்களுக்கும் நேராமல் இருக்க யாரும் flipkartல் எதுவும் ஆர்டர் செய்யாதீர்கள்.

இவர் தனது பார்சலை unbox செய்யும் வீடியோவையும் பகிர்ந்திருந்தார். ரமணாவின் பதிவிற்கு டிவிட்டர்வாசிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், நிறுவனம் உடனடியாக செயல்பட்டு இவருக்கு refund அளித்துள்ளது.

இதற்கு முன்னர் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் ஆர்டர் செய்யப்பட்டதில், செங்கல், துணி துவைக்கும் சோப், வரட்டி போன்றவை டெலிவர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?