மணிப்பூர் முழுவதும் AFSPA அமல் ஏன்? 5 மாதங்களாக தொடரும் வன்முறை - விரிவான தகவல்கள்! Twitter
இந்தியா

மணிப்பூர் முழுவதும் AFSPA அமல் ஏன்? 5 மாதங்களாக தொடரும் வன்முறை - விரிவான தகவல்கள்!

Antony Ajay R

மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி மக்களுக்கு இடையிலான போராட்டம் அணையாத நெருப்பாக எரிந்துவருகிறது. கடந்த ஜூலை மாதம் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் காணாமல் போயினர். அவர்கள் கொலை செய்யப்பட்டதாக வீடியோ வெளியானது.

மணிப்பூரில் கலவரம் மே மாதம் 4ம் தேதிமுதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இன்றளவும் மத்திய, மாநில அரசுகள் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விழிப் பிதுங்கியிருக்கின்றன.

இணைய சேவை திரும்பவும் அமைக்கப்பட்ட பிறகு பல வீடியோக்கள் வெளியாகின. இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துவரப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கியது.

அதுபோல, காணாமல் போன இருவரும் உயிரிழந்துவிட்டதாக வீடியோ வெளியானது. இது மெய்திமக்களிடையே கொதிப்பை அதிகரித்தது. மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இரண்டாவது நாள் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். முதல்வர் பைரென் சிங்கின் செயலகம் நோக்கி மாணவர்கள் அணிவகுத்து செல்ல, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. காவலர்கள் மீது கற்களை வீசினர். கலவரத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டது. தடியடி நடத்தி கலைத்தனர். போராட்டத்தில் பலர் காயமடைந்தனர்.

இதன் விளைவாக மாநிலம் முழுவதையும் பதற்றத்துக்குறிய இடமாக அறிவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே மணிப்பூரில் மலைப்பிரதேசங்கள் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரின் மலைப்பகுதியில் குக்கி பழங்குடி மக்களும் பள்ளத்தாக்கு பகுதியில் மெய்தி மக்களும் வசித்து வருகின்றனர். பள்ளத்தாக்கில் இம்பால், தௌபால், விஷ்ணுபூர் உள்ளிட்ட 19 காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

AFSPA அமலில் இருக்கும் இடங்களில் அசாம் ரைஃபில் ஃபோர்சஸ் மற்றும் இராணுவம் காவல்துறையின் அனுமதியின்றி தன்னிச்சையாக செயல்பட முடியும்.

பள்ளத்தாக்கு பகுதிகளில் தீவிரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. மெய்தி கலவரக்காரர்கள் காவல்துறையில் இருந்தும் பாதுகாப்பு படையினரிடம் இருந்தும் எடுத்துக்கொண்ட ஆயுதங்கள் தீவிரவாத குழுக்களுக்கு கிடைத்திருக்கலாம் எனப் பாதுகாப்புபடையினர் சந்தேகிக்கின்றனர்.

மாநிலம் முழுவதும் AFSPA அமல்படுத்தப்பட இது முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

AFSPA அமல்படுத்தப்படும்பட்சத்தில் மாநிலத்த்தில் ஆளுநருக்கு அதிகாரம் கொடுக்கப்படும்.

இராணுவம் மற்றும் அவர்களுக்கு உதவியாக செயல்படும் படையினர் காவல்துறை அனுமதி இல்லாமலே உயிரை பறிக்கும் தாக்குதல்களை மேற்கொள்ளலாம்.

அதாவது கூட்டமாக உயிரைப் பறிக்கும் ஆயுதம் எடுத்துச் செல்பவர்களை இராணுவம் கொல்ல முடியும். இதில் கூட்டம் அல்லது ஆயுதம் என்பதற்கு சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

அக்டோபர் 1 முதல் AFSPA முழுமையாக அமல்படுத்தப்படும் என்றுக் கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?