சுஜித் சட்டோபாத்யாய் Twitter
இந்தியா

'பழங்குடி மாணவர்களின் Master ' - 2 ரூபாய்க்கு டியூஷன் எடுக்கும் 78 வயது ஆசிரியர் சுஜீத்

NewsSense Editorial Team

ஒரு சமூகத்தை ஆக்கவும் அழிக்கவும் ஒரு தனிநபரால் முடியுமானால் அது ஆசிரியரால் மட்டும் தான் முடியும். இன்று இணையத்தில் இல்லாத அறிவா என்ன? ஆனால் அதே விஷயத்தை ஒரு நல்ல ஆசிரியர் விளக்கும் போது அது எளிமைப்படுத்தப்பட்டு, மாணவர்கள் மனதில் சட்டெனப் பதிகிறது.

அந்த அளவுக்கு நல்ல ஆசிரியர்களுக்கான முக்கியத்துவம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருவதை பல்வேறு சம்பவங்களும் நமக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அப்படி ஒரு 78 வயது ஆசிரியர், தற்போது வலைத்தளங்கள் வழி நம் மனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் சுஜித் சட்டோபாத்யாய். இவர் மேற்கு வங்கத்தில் உள்ள 'ராம்நகர் உச்ச மத்யமிக் வித்யாலயா' என்கிற பள்ளியின் முன்னாள் தாலாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மேற்கு வங்கத்தின் புர்ப பர்தமான் மாவட்டத்தின் ஆஸ்கிராம் என்கிற கிராமத்தில் 'சடை ஃபகியர் பாட்ஷாலா' என்கிற பெயரில் ஒரு சிறு பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்.

சுஜித் சட்டோபாத்யாய் மாணவிகளுடன்

2 ரூபாய் கட்டணம்

இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுவும் ஆசிரியருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மட்டுமே இந்த தொகையும் வசூலிக்கப்படுகிறதாம்.

காலை 6.30 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயிற்சிப் பள்ளி, மாலை சுமார் 6 மணி வரை நடைபெறுமாம். பயிற்சிப் பள்ளி என்றால் வெறுமனே பாடம் எடுப்பது, வீட்டுப் பாடம் திருத்துவதோடு மட்டும் முடிவதில்லை. முறையாக வருகைப் பதிவு செய்யப்படுமாம், அதே போலக் குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிற்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களோடு கூட்டம் நடத்தப்படுகிறதாம்.

இந்த பள்ளியில் சுமார் 350 பேர் படிக்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் கீழ் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் சென்று படிப்பவர்களாம். குறிப்பாக இந்த பாடசாலையில் பயில்பவர்களில் மாணவிகளின் எண்ணிக்கைதான் அதிகம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி.

சுஜித் சட்டோபாத்யாய்

சடை ஃபகியர் பாட்ஷாலா

சுஜித் சட்டோபாத்யாய் தன் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்த போது, மூன்று பெண்கள் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலிருந்து படிக்க உதவி கேட்டு வந்தார்கள். அதன் பிறகு தான் மனிதர் தன் வாழ்வை இந்த குழந்தைகளுக்காக அர்பணித்து கல்வி பயிற்றுவிக்கத் தொடங்கியுள்ளார்.

2004ஆம் ஆண்டு முதல் 'சடை ஃபகியர் பாட்ஷாலா' பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருவதாக தி பெட்டர் இந்தியா வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. இந்த பயிற்சிப் பள்ளியில் மேனிலைப் பள்ளிக்கான சமூக அறிவியல் பாடமும், வங்க மொழியில் இளங்களை பட்டப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.

பள்ளியில் வழங்கப்பட்டுள்ள பாடபுத்தகத்தை நடத்திவிட்டேன் இதன் பிறகு எனக்கும், மாணவர்களுக்கும், சமூகத்துக்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கிச் செல்பவர் அல்ல நம் சுஜித் மாஸ்டர்.

சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்தும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டியதன் அவசியம், நிலைத்த சுற்றுச்சூழல் வாழ்க்கை முறை போன்றவற்றைக் குறித்தும் தொடர்ந்து தன் ஆதரவுக் குரலைப் பதிவு செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்தி வருகிறார் சுஜித் சட்டோபாத்யாய்.

78 வயதிலும் தளராத ஆசான் சுஜித் சட்டோபாத்யாய் அவர்களுக்கு நம் ராயல் சல்யூட்.

இவரது தன்னலமற்ற கல்விச் சேவையைப் பாராட்டி, கடந்த நவம்பர் 2021ல், இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இவருக்குப் பத்ம ஶ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?