மேகாலயா: 'உயிருள்ள வேர் பாலங்கள்' முன்னோர்களின் பிரமிப்பூட்டும் கட்டுமானம் - வாவ் தகவல்கள் இரட்டை வேர் பாலம்
இந்தியா

மேகாலயா: 'உயிருள்ள வேர் பாலங்கள்' முன்னோர்களின் பிரமிப்பூட்டும் கட்டுமானம் - வாவ் தகவல்கள்

Antony Ajay R

இந்தியாவில் இயற்கை அதிசயங்கள் நிறைந்த பகுதி என்றால் வடகிழக்கு மாநிலங்களைக் குறிப்பிடலாம்.

குறிப்பாக மேகாலயா மாநிலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் எழிலைக் கொண்டுள்ளது.

மேகாலயாவில் பலவகையான கலாச்சாரங்களைப் பின்பற்றும் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.

பழங்குடி மக்கள் என்றால் காட்டுக்குள் படிப்பறிவு இல்லாமல் இருக்கும் கூட்டம் என எண்ண வேண்டாம். அதிகமாக படித்தவர்களைக் கொண்ட மாநிலம் மேகாலயா!

கல்வியறிவு மட்டுமல்லாமல் இயற்கை சார்ந்த அறிவும் அவர்களிடத்தில் அதிகமாக இருந்தது. அதற்கு ஒரு சான்று தான் காசி பழங்குடி மக்கள் உருவாக்கிய இந்த உயிர்வாழும் பாலம்.

600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலங்கள் மரங்களின் உயிர்வாழும் வேர்களைப் பிண்ணி மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த பாலங்கள் 15 முதல் 250 அடி நீளமானவை.

இவை முழுவதுமாக 15 முதல் 30 ஆண்டுகள் இடைவெளியில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த பால கட்டுமான பணியை காசி பழங்குடி முன்னோர்கள் Ficus Elastica மரங்களை ( ஒரு வகை ரப்பர் மரம் ) நடுவதில் இருந்து தொடங்கியிருக்கின்றனர்.

துணை வெப்பமண்டல பகுதியான மேகாலயாவில் இந்த மரங்கள் ஏராளமாக வளரும். இவை தனது வேர்களை ஆழமாக செலுத்துவதற்கு பதிலாக அகலமாக செலுத்தும் தன்மைக் கொண்டவை.

இந்த வேர்கள் முதிர்வடையும் போது வான்வழி செல்லும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. இதனால் இவை அதிகமாக நிலைத்திருக்கும்.

இந்த பாலம் மரக் கிளைகள் மற்றும் கொம்புகளின் வழியாகவே முழுவதும் செல்லுமாரு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் முதிர்ந்த வேர்கள் இளம் வேர்களுக்கு ஊட்டச்சத்தை பகிரும் விதமாக மூங்கில் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது. இது பாலத்தை சாகாமல் வைத்திருக்க உதவுகிறது.

வன்வழி செல்லும் வேர்கள் மூங்கில் அல்லது பிற மரங்களின் மீது பின்னப்பட்டு நதியின் அடுத்த பக்கத்துக்க்கு சென்று நிலத்தில் நடப்பட்டுள்ளன.

இதிலிருக்கும் முதிர்ந்த வேர்கள் பாதிப்படையும் போது இளம் வேர்கள் அந்த இடத்தை நிரப்புகின்றன.

இவ்வாறு தனக்கு ஏற்படும் பிரச்னைகளை தானே சரிசெய்துகொள்கிறது இந்த பாலங்கள்.

இது சாதாரண பாலங்களை விட சிறந்தது எனவும் அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில் சாதாரண பாலங்கள் மலைப் பிரதேசங்களில் மண் அடுக்குகளை பாதித்து மண்சரிவு ஏற்பட காரணமாக அமையும்.

ஆனால் இந்த வேர் பாலங்கள் மண் சரிவிலிருந்து காடுகளையும் பாதுகாக்கிறது.

மேலும் மேகாலயா போன்ற அதிக மழை பொழியும் பகுதியில் எந்த பாலமும் இந்த அளவு நூற்றாண்டுகள் கடந்து நிலைத்திருக்க முடியாது.

இந்த வேர் பாலங்களின் மூலமாக மக்கள் ஒரு கிராமத்தில் இருந்து மற்ற கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று வர முடிகிறது.

முக்கியமாக இதனால் மேகாலயாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. மேகாலயா முழுவதும் 100க்கும் மேற்பட்ட உயிர்வாழும் பாலங்கள் உள்ளன. இவை அந்த பகுதியின் பொருளாதாரத்தை வளர்ப்பதில் பங்கு கொண்டுள்ளன. இவற்றுக்காக அந்த மக்கள் முன்னோர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?