Award Function Mizoram Police
இந்தியா

காவல்துறை : உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு இந்திய மாநிலம் - என்ன சாதித்து?

Antony Ajay R

சிறப்பாக பணி மேற்கொண்டமைக்காக மிசோரம் மாநில காவல்துறைக்கு உலக சாதனை புத்தகத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த உலக சாதனை புத்தகத்தில் இவர்களின் சாதனை இடம் பெற்றிருக்கிறது.

வடகிழக்கு மாநிலமான மிசோரம் காவல்துறைக்கு பெருமைமிக்க தங்க பதிப்பு 2022 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனை புத்தகம், உலக தரத்திலான காவல்துறை நடவடிக்கைகளை பதிவு செய்து பெருமைப்படுத்தி வருகிறது.

இந்த சான்றிதழை மிசோரம் காவல்துறை சார்பில் சிஐடி டிஐஜி பூ லால் பூலியானா ஃபானாய் பெற்றுக்கொண்டார்.

கடந்த மே மாதம் மிசோரம் காவல்துறையினர், வெளி நாடுகளுக்கு கடந்தவிருந்த 468 வன விலங்குகளை காப்பாற்றினர்.

ஜூன் மாதத்தில் 930 கிலோ 229 கிராம் எடையுள்ள போதைப் பொருட்களை கைப்பற்றி அவற்றை அழித்தனர்.

காவல்துறையின் இந்த செயல்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கின்றன.

‘‘இறுதியில் எங்களின் கடமை மற்றும் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விருதுகளை, எங்களுக்கு ஆதரவாக இருந்த எங்கள் குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்கிறோம். மக்களின் ஆதரவும், நம்பிக்கையும், எங்களை மேலும் வலுப்படுத்தி, ஊக்கமளித்துள்ளது. எதிர்காலத்திலும், நாங்கள் சிறப்பாக தொடர்ந்து பணியாற்றுவோம்’’ என்று மிசோரம் காவல்துறையின் டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?