Rahul Gandhi - Sonia Gandhi

 

Twitter

இந்தியா

Morning News Tamil : காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் - முக்கியச் செய்திகள்

Antony Ajay R

காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டியில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜ.க பெறும் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.

ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. பிரதான எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரத் தலைவர் இல்லாமல் இருப்பதே இந்தத் தோல்விக்கு காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் விமர்சனம் செய்துவந்தனர்.

இந்தநிலையில், சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் பங்கேற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ‘காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2024 தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படத் தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரித்திருக்கின்றன.

கங்கனா

காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து பாலிவுட் மௌனம் காப்பது ஏன்? - கங்கனா கேள்வி

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. நேற்று முன்தினம் இப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டப்பட்டு வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.

மேலும், 2024 தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படத் தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் படம் தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து பாலிவுட்டில் நிலவும் அமைதியை கவனியுங்கள். இந்தப் படம் ஒவ்வொரு கட்டுக்கதையையும் உடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு எந்த மலிவான விளம்பரமும் செய்யப்படவில்லை. வசூல் குறித்து எந்தவிதமான போலி எண்களும் வெளியாகவில்லை. மாஃபியா தேச விரோத செயல்திட்டங்கள் இல்லை. ஆனாலும் பாலிவுட் இந்தப் படம் குறித்து அமைதியை கடைபிடிப்பது ஏன் என தெரியவில்லை. நாடு மாறும் போது படங்களும் மாறும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து சந்தித்தார். அப்போது படம் குறித்து பிரதமர் மோடி அவர்களை பாராட்டினார். சந்திப்புக்கு பின் பேசிய இயக்குநர் விவேக், "மோடி ஜியின், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றிய பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும்தான் படத்தை மேலும் சிறப்புறச் செய்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

மகாஸ்வேதா சக்ரவர்த்தி

பயத்துடன் இருந்த மாணவர்களை பார்த்தபோது 13 மணி நேர பயணம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை - உக்ரைன் சென்ற பெண் விமானி

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கி தவித்த 800 மாணவர்களை 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் 6 விமானங்களை இயக்கி மீட்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார் 24 வயதே ஆன பெண் பைலட் மகாஸ்வேதா சக்ரவர்த்தி. அவரது பணியை சமூக ஊடகங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் அங்கு மருத்துவம் படிக்கச் சென்றவர்கள், பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை போலந்து, ஹங்கேரி ஆகிய உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து இந்தியா மீட்கிறது. இதற்காக பிப்ரவரி 24 அன்று ஆபரேஷன் கங்கா என்ற திட்டம் தொடங்கப்பட்டு 3வது வாரமாக தொடர்கிறது. இதுவரை சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் தமிழக மாணவர்களும் அடக்கம்.

ஆபரேஷன் கங்கா திட்டத்தில் கொல்கட்டாவைச் சேர்ந்த மகாஸ்வேதா சக்ரவர்த்தி என்ற 24 வயதாகும் பெண் பைலட் முக்கியப் பங்காற்றியுள்ளது தற்போது கவனத்திற்கு வந்துள்ளது. இவர் தனியார் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார். பிப்ரவரி 27 முதல் மார்ச் 7 வரை உக்ரைன் எல்லை நாடுகளுக்கு 6 விமானங்களை இயக்கி சுமார் 800 மாணவர்களை மீட்க உதவியுள்ளார். இது தனது வாழ்நாள் அனுபவம் என பேட்டி தந்துள்ளார். ஒரு நாளைக்கு 13 - 14 மணிநேரம் ஏர்பஸ் ஏ320 விமானத்தில் பறக்க வேண்டியிருந்ததாகவும் பயத்துடன் வீட்டிற்கு எப்போது செல்வோம் என்ற விரக்தியில் இருந்த மாணவர்களை பார்த்த போது அது தனக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை என கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் அமேதியில் உள்ள விமானிகளுக்கான பயிற்சி நிறுவனமான இந்திரா காந்தி ராஷ்டிரிய உரான் அகாடமியில் மகாஸ்வேதா பட்டம் பெற்றவர். பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் திட்டமான வந்தே பாரத் திட்டத்திலும் இவரது பங்களிப்பு இருந்தது. 2ம் அலையின் போது ஆக்சிஜன் செறிவூட்டிகளை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வந்துள்ளார். தடுப்பூசிகளை புனேவிலிருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு விமானம் மூலம் கொண்டு சென்றுள்ளார்.

இலங்கைக்கு 447 ரன்கள் இலக்கு

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நேற்று தொடங்கியது . இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.


அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட்டுக்களை இழந்து 252 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் எடுத்தார்.


இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியமால் தடுமாறியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 30 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது.


இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த இலங்கை 35.5 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை இழந்து 109 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்தார் இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.


இதனை தொடர்ந்து இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கோலி 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட், அதிரடியாக விளையாடி குறைந்த பந்துகளில் அரைசதன் அடித்து சாதனை படைத்தார். அவர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் அய்யர் 67 ரன்கள் குவித்தார்.


இந்திய அணி இரண்டாம் இன்னிங்சில் 68.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி இலங்கை அணிக்கு 447 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. இது இரண்டாம் நாள் என்பதாலும், கடின இலக்கை நோக்கியும் இலங்கை அணி களமிறங்குவதால், இந்த போட்டியில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியாவின் அடுத்தப்படம் - ஆர்.கண்ணன் தயாரிப்பு

ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரிக்கிறார்.

ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் உட்பட பல படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவர், தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை ரீமேக் செய்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

சமீபத்தில், போகஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரித்து இயக்குகிறார். அதில் ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்சன் கதையை கொண்ட இந்தப் படத்தில் ஹன்சிகா, விஞ்ஞானியாக வருகிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.


இதற்கிடையே, நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படம் ஒன்றை அவர் தயாரிக்கிறார். இந்தப் படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். கதாசிரியர் ஆர்.செல்வராஜ் மகனான இவர், இதற்கு முன் கத்திக்கப்பல், துப்பாக்கி முனை, `நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல' படங்களை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?