கர்நாடகா ஹம்பி கோவில்; இசைத் தூணின் பின்னணி என்ன? ட்விட்டர்
இந்தியா

கர்நாடகா ஹம்பி கோவில்: 56 தூண்கள்; ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இசை- Music Pillarன் பின்னணி என்ன?

Keerthanaa R

இந்தியா அதன் பாரம்பரிய தலங்களுக்காக பெயர்பெற்றது. குறிப்பாக கோவில்களுக்கு. இந்தியக் கோவில்கள் அதன் கட்டமைப்புக்காக புகழ்பெற்றவை. இன்று டெக்னாலஜி வளர்ந்து எல்லாத் துறைகளிலும், மனித மூளைக்கு எட்டாத வளர்ச்சியை உலகம் கண்டு வருகிறது.

ஆனால், தொழில்நுட்பம் என்ற ஒன்று இல்லாத காலத்திலேயே பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வலுவாக நிற்கும் கட்டடங்கள், வடிவமைக்கப்ப்பட்டன.

அப்படி, அதன் கட்டுமான மர்மத்திற்காக பிரபலமடைந்த இந்தியக் கோவில்களில் ஒன்று தான் ஹம்பியிலுள்ள விட்டலா கோவில்.

இங்கு மியூசிக்கல் பில்லர்கள் இருக்கின்றன. இந்த இசை தூண்களுக்காகவே இக்கோவில் ஃபேமஸ். இந்த இசைத்தூண்களின் பின்னணி என்ன? இவற்றிலிருந்து இசை எப்படி வெளியாகிறது?

விஜயநகர பேரரசின் தலைநகராக இருந்ததால், ஹம்பி விஜயநகரம் என்று அறியப்படுகிறது. இங்கு அமைந்துள்ள விட்டலா கோவில் அதன் கட்டடக்கலை பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது. இக்கோவிலில் மிகப்பெரிய வளாகம், அழகிய நீண்ட மண்டபங்கள், அங்கு செதுக்கப்பட்டுள்ள சிலைகள் பார்த்து ரசிக்க இரண்டு கண்கள் போதாது.

விஜயநகரத்தை ஆண்ட இரண்டாம் தேவராயரால் கட்டப்பட்டது இந்த விட்டலா கோவில். இதனால் இக்கோவிலை விஜயவிட்டலா கோவில் என்றும் அழைக்கின்றனர். இங்கு விஷ்ணு கடவுளின் அம்சமாக விட்டலா என்ற கடவுள் பிரதானமாக இருக்கிறார்

விட்டலா கோவிலில் மொத்தம் 56 தூண்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 3.6 மீட்டர் உயரமுடைய தூண்கள். இங்குள்ள ஒரு ஒரு தூணை சுற்றியும் 7 சிறிய தூண்கள் இருக்கின்றன.

இந்த 7 சிறிய தூண்கள் ஒவ்வொன்றிலிருந்தும், கர்நாடக சங்கீதத்தின் சரிகமபதநி நாதம் ஒலிக்கும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு நாதத்தை வெளிப்படுத்தும். குறிப்பாக சந்தனக் கட்டையை கொண்டு இதன் மீது அடித்தால் எழும் சத்தமானது, காதுக்கு இனியதாக இருக்கிறது

இந்த தூண்கள் அமைந்திருக்கும் மண்டபத்தை ரங்க மண்டபம் என அழைக்கின்றனர். இங்கு அந்த காலத்தில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த சமயங்களில் இந்த தூண்களும் பயன்படுத்தப்பட்டதாக வல்லுநர்களின் கூற்றும் இருக்கிறது.

ஒரு புறம் அறிவியல் ஆராய்ச்சிகள், இந்த கற்களில் அதிக அளவு சிலிக்கா மற்றும் உலோக தாது இருப்பதால் இந்த சத்தம் எழுவதாக கூறுகின்றன.

இந்த ஹம்பி விட்டலா கோவிலை தவிர இந்தியாவில் இன்னும் சில கோவில்களிலும் இப்படி இசை தூண்கள் இருக்கும் கோவில்களாக இருக்கின்றன. அவற்றில் திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோவில் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?