கர்நாடகாவில் கல்லூரி மாணவர் ஒருவர் ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மனிப்பால் பல்கலைக் கழகத்தில் படித்துவரும் மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் முஸ்லீம் சமூகத்தினரை தீவிரவாதிகள் எனக் கூறியது தான் இந்த வாக்குவாதத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவன் அவர் கூரியது தவறு என சுட்டிக்காட்டினார். அந்த மாணவனை ஆசிரியர் நீ என் மகன் போன்றவன் என்றும் வேடிக்கையாக அப்படித் தெரிவித்ததாகவும் கூறி சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்.
அந்த வீடியோவில், "இந்த நாட்டில் முஸ்லீமாக இருந்து தினமும் இதுபோன்ற விஷயங்களை சந்திப்பது வேடிக்கையானது அல்ல" என உரத்த குரலில் கூறுகிறார் அந்த மாணவர்.
ஆசிரியர் நீ எனது மகன் போல எனக் கூறும் போது, "உங்கள் மகனை தீவிரவாதி எனக் கூறுவீர்களா? எல்லார் முன்னிலையிலும்? நீங்கள் ஒரு ஆசிரியர், நீங்கள் அப்படி சொல்லக் கூடாது" என்றார் அவர்.
இந்த வீடியோவை அமைதி மற்றும் மோதல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் அஷோக் ஸ்வைன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த மாணவருக்கு அலோசனை வழங்கப்பட உள்ளது. அந்த ஆசிரியர் பிரச்னைகள் தீரும் வரை வகுப்புகள் எடுப்பதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.
நெட்டிசன்கள் இந்த வீடியோவில் தனது நிலைப்பாட்டை உரக்கக் கூறிய மாணவருக்கு பாராட்டுக்களையும் அந்த ஆசிரியருக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust