Dussera: மைசூரூவில் கொண்டாடப்படும் கோலாகல திருவிழா - சிறப்புகள் என்ன? twitter
இந்தியா

Dussera: மைசூரூவில் கொண்டாடப்படும் கோலாகல திருவிழா - சிறப்புகள் என்ன?

கர்நாடக மாநிலம் மைசூரூவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த தசரா திருவிழாவை காணவே அந்த சமயத்தில், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மைசூருவில் குவிகின்றனர். இந்த 10-நாள் பண்டிகைக்காக ஆண்டு முழுக்க காத்திருப்போர் ஏராளம்.

Keerthanaa R

ஆண்டு தோறும் 9 நாட்களுக்கு விமர்சியாக கொண்டாடப்படும் இந்து பண்டிகை தான் நவராத்திரி. சில இடங்களில் 10 நாட்களுக்கு நடைபெறும், இதனை தசரா என்று அழைக்கின்றனர்.

இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும், பல நாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்த நவராத்திரி திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

இந்த பண்டிகையை கொலு பண்டிகை என்றும் அழைக்கின்றனர்.

வீடுகளில், 3, 5, 7 என்று ஒற்றைப்படையில் படிக்கட்டுகள் அடுக்கி, அதில் பொம்மைகளை காட்சிப்படுத்துகிறார்கள். இதில், மரப்பாச்சி எனப்படும், மரத்தினால் ஆன தம்பதியரின் பொம்மை தான் முக்கியத்துவம் வாய்ந்தது.

மரபாச்சி பொம்மைகள் மட்டுமல்லாது வித விதமான அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள், கடவுள்களின் மண் பொம்மைகள், பாண்டங்கள், காய்கறிகள், பழங்கள், ஏன் சாதாரண மனித பொம்மைகள் கூட கொலுவில் வைக்கிறார்கள்.

இந்தியாவில், வட மாநிலங்களில் தசரா என்று கொண்டாடப்படும் இந்த திருவிழா, கர்நாடக மாநிலம் மைசூரூவில் படு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த தசரா திருவிழாவை காணவே அந்த சமயத்தில், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மைசூருவில் குவிகின்றனர்.

இந்த 10-நாள் பண்டிகைக்காக ஆண்டு முழுக்க காத்திருப்போர் ஏராளம்.

மைசூரு நகரமே திருவிழா கோலம் பூண்டிருக்கும். குறிப்பாக மைசூரு மகாராஜா அரண்மனை!

புராணங்களின் படி, முப்பெரும் தேவியரான, லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் துர்கை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இந்த ஒன்பது ராத்திரிகள்.

மைசூருவில், குறிப்பாக துர்கை அம்மனின் அரக்கன் மகிசாசூரனை கொன்றதன் வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இங்கு சாமுண்டேஸ்வரி என்ற அவதாரத்தில் துர்கை அம்மன் பூஜிக்கப்படுகிறார்.

மேலும், மைசூரூவை ஆண்ட வாடையார் பரம்பரை, மக்களுக்கு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்க முற்பட்டனர். ஆகையால், வாடையார் குடும்பமே இந்த பண்டிகையை தலைமைத் தாங்கி விழாவாக கொண்டாடியது.

அப்போது தொடங்கி இப்போது வரை அதனை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

மைசூரூ தசரா திருவிழாவின் சிறப்புகளில் ஒன்று, ஜம்போ சவாரி. அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது அம்பாரியில், கடவுளின் சிலை அமரவைக்கப்பட்டு ஊர்வலமாக மைசூரூ நகரின் தெருக்களில் வலம் வரும்.

இதோடு இங்கு கர்நாடக இசை மற்றும் நடன கச்சேரிகள் இந்த தசரா சமயத்தில் அரங்கேறும். மேலும் வண்ணமையமான விளக்குகளால் மைசூரூ அரண்மனை அலங்கரிக்கப்படும். தசரா சமயத்தில், மாலையில் இங்கு 1000 விளக்குகள் கொண்டு லைட் ஷோ நடத்தப்படுகிறது.

இந்த லைட் ஷோ தான் தசரா திருவிழாவின் ஹைலைட்!

மேலும் இந்த சமயத்தில், மைசூரூவில் வித விதமான உணவு வகைகளும் கிடைக்கும். பாரம்பரிய உணவுகள் தொடங்கி, பன்னாட்டு உணவுகளும் இங்கு கிடைக்கும்.

இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை திருவிழா நடக்கிறது. மைசூரூவுக்கு வண்டியை விடுங்க!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?