சந்திரயான் 3: நிலவில் சிதறி கிடக்கும் 96 மனித கழிவு பைகள் - நாசாவின் திட்டம் என்ன? ட்விட்டர்
இந்தியா

சந்திரயான் 3: நிலவில் சிதறி கிடக்கும் 96 மனித கழிவு பைகள் - நாசாவின் திட்டம் என்ன?

Keerthanaa R

நிலவுக்கு சென்ற விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய டயாப்பர்கள் அடங்கிய 96 பைகள் இன்னமும் நிலவில் கிடப்பதாக கூறப்படுகிறது.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா உட்பட சில செய்தி தளங்களில் இது குறித்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் நிலவின் மீது கால் பதித்தான்.

1969ல் முதன் முதலில் அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த முதல் மனிதரானார். அவரது கால் தடம் கூட அங்கு இன்றும் இருப்பதாக தகவல்கள் இருக்கின்றன.

அப்போது முதல் நிலவில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

நிலவுக்கு சென்ற பின்னர், அதன் வடிவம் முதல் மனிதர்கள் அறியாத பல புதிய சுவாரஸ்யமான தகவல்கள் அங்கிருந்து நமக்கு கிடைத்தது.

அதே சமயம் மனிதனும் அவனது தடங்களை அங்கு விட்டுவிட்டு வந்துள்ளான்.

அது வெறும் காலடி தடமல்ல!

மலம், வாந்தி, சிறுநீர் இதர மனித கழிவுகள் நிலவில் வீசப்பட்டுள்ளன. இவை அடங்கிய சுமார் 96 பைகள் நிலாவின் தரைப்பரப்பில் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதாக கூறப்படுகிறது.

இந்த கழிவுகள விஞ்ஞானிகள் பூமிக்கு கொண்டு வந்து ஆராய்ந்து, நிலவில் வாழ முடியுமா என்ற சாத்தியக்கூறுகளை ஆராய ஆர்வமாக உள்ளனராம்.

நிலவில் நமக்கு தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த இடமிருக்காது. அப்படியேத்தான் வீசியெறிய வேண்டும்.

மனித கழிவு பைகளை தவிர இன்னும் சில பொருட்களும் நிலாவில் மனிதர்கள் விட்டு வந்துள்ளனர். சிலவற்றை மனிதர்கள் நினைவுச்சின்னமாகவும் விட்டுவந்துள்ளனர்.

இதில் அமெரிக்கக் கொடி சுருட்டப்பட்டிருந்த குழாய், நிலவின் காட்சிகளை பூமிக்கு அனுப்ப அவர்கள் பயன்படுத்திய டிவி கேமரா, நிலவு பாறை மற்றும் தூசி சேகரிக்க அவர்கள் பயன்படுத்திய கருவிகள் ஆகியவை அடங்கும்.

ஒரு விண்வெளி வீரரின் குடும்பப்புகைப்படம், ஒருவர் செதுக்கிய சிறிய அளவு மனித சிலை, விண்ணில் பயன்படுத்தக் கூடிய ஷூக்கள், கோல்ஃப் பந்துகள் உள்ளிட்ட சில பொருட்கள் அங்கு உள்ளன

இவை அப்போலோ 11 தரையிறங்கிய இடத்திற்கு மேற்கே உள்ளன. இதைச் செய்வதன் மூலம் அவர்கள் 'டாஸ் மண்டலத்தை' உருவாக்கினர்.

மனிதர்கள் நிலவில் இருந்து வெளியேறும்போது சுமையை குறைக்க வேண்டியது அவசியம். விண்வெளி வீரர்கள் பயணிக்கும் விண்கலத்தில் குறிப்பிட்ட அளவு சுமைய தான் ஏற்றி செல்ல இயலும். அளவுக்கு அதிகமாக சுமை இருந்தால் அது வீரர்களின் பயணத்திற்கு ஆபத்தாகிவிடும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?