உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரம் ஏறுபவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நேபாளம் அரசு முடிவெடுத்துள்ளது. சிகரத்தில் ஏறும் அனைவரும் மின்னணு சிப்பை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இ - சிப் 8,849 மீட்டர் உயரமான மலையில் ஏறும் போதோ அல்லது இறங்கும் போதோ அவசர காலங்களில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
எனவே சிப் பயன்படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும் என அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. வசந்த காலத்திலிருந்தே இந்த நடைமுறை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்புகின்றனர். பலர் வெற்றிகரமாக மலையின் உச்சியை அடைய முடிந்தாலும், உயிரிழப்புகள், காயங்கள் பற்றிய அறிக்கைகள் பல ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேபாள அரசின் தரவுகளின் படி 1953 ஆம் ஆண்டு முதல் எவரெஸ்ட் சிகரத்தில் சுமார் 300 நபர்கள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது.
2023 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் மட்டும் நான்கு நேபாளர்கள், ஒரு இந்தியர் மற்றும் ஒரு சீனர் உட்பட 12 மலை ஏறுபவர்கள் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிய பயணத்தின் போது உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பனிப்புயல் மற்றும் பனிச்சரிவுகள் உள்ளிட்ட சவாலான நிலப்பரப்பு, தீவிர வானிலை போன்றவை இதற்கு முக்கிய காரணிகளாகும்.
இதனால் நேபாள அரசாங்கம் மலை ஏறுபவர்களுக்கு மின்னணு சிப்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இது தற்போது USD 10 முதல் USD 15 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிப்களை மலை ஏறுபவர்களின் ஜாக்கெட்டுகளில் பொருத்துவது பாதுகாப்பான பயணங்களுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கும் எளிதாக இருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust