Odisha Groom Walks All Night, Covers 28 Km To Reach Bride's Home Due To Drivers' Strike Twitter
இந்தியா

Drivers Strike! இரவு முழுவதும் 28 கி.மீ நடந்து சென்று திருமணம் செய்துகொண்ட மணமகன்- எங்கே?

இன்சூரன்ஸ், ஓய்வூதியம், நல வாரியம் அமைத்தல் போன்ற நலத்திட்டங்களை வலியுறுத்தி புதன்கிழமை முதல் மாநிலம் முழுவதும் டிரைவர் ஏக்தா மகாசங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியது.

Priyadharshini R

ஒடிசாவின் ராய்கடா மாவட்டத்தில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், மணமகனும் அவரது குடும்பத்தினரும் 28 கிலோமீட்டர் தூரம் நடந்தே மணப்பெண்ணின் கிராமத்திற்கு சென்றிருக்கின்றனர்.

கல்யாண்சிங்பூர் தொகுதிக்கு உட்பட்ட சுனகண்டி பஞ்சாயத்தில் இருந்து நேற்று இரவு முழுவதும் நடந்து சென்று திபாலபாடு கிராமத்தை அடைந்துள்ளனர். அங்கு இன்று திருமணம் நடைபெற்றது.

மணமகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இரவில் நடந்து செல்வது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மணமகனின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,

"வாகன வேலைநிறுத்தம் காரணமாக போக்குவரத்து வசதி இல்லை. இரவு முழுவதும் நடந்தே கிராமத்தை அடைந்தோம். எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.

இன்று, காலை திருமணம் நடைபெற்றது. இதனால் மணமகனும் அவரது குடும்பத்தினரும் தங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் மணமகள் வீட்டில் தங்கும் சூழல் ஏற்பட்டது.

ஓட்டுநர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவார்கள் என்று அவர்கள் காத்திருக்கின்றனர்.

இன்சூரன்ஸ், ஓய்வூதியம், நல வாரியம் அமைத்தல் போன்ற நலத்திட்டங்களை வலியுறுத்தி புதன்கிழமை முதல் ஒடிசா மாநிலம் முழுவதும் டிரைவர் ஏக்தா மகாசங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியது.

அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று மாநில அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஒடிசாவில் வணிக வாகன ஓட்டுநர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் 90 நாட்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் பி கே ஜெனா மற்றும் டிஜிபி எஸ் கே பன்சாக் ஆகியோர் வேலைநிறுத்தம் செய்த ஓட்டுநர்களிடம் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு வேண்டுகோள் விடுத்ததையடுத்து அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பல்வேறு இடங்களில் அலுவலகம் செல்வோர், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?