பாம்பூர் காஷ்மீரில் உள்ள சிறப்பு வாய்ந்த இடமாகும். இலையுதிர் காலத்தில் இங்கு வந்தால் ஊதா நிறப் பூக்கள் செழித்து வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம்.
இந்த பூக்கள் எல்லா இடங்களிலும் நாம் கடந்து செல்லும் காட்டுப்பூக்கள் அல்ல, தலையில் சூடிக்கொள்ளவும் முடியாது. குறிஞ்சி பூக்கள் போல அரிதானவையும் அல்ல. ஆனால் அதிக அளவில் பணம் ஈட்டித்தரக் கூடிய குங்குமப்பூக்கள்.
குங்குமப்பூ உலகிலேயே விலையுயர்ந்த மசாலா வகையாகும். பாம்பூர் ஒரு குங்குமப்பூ நகரம் எனலாம். இது ஸ்ரீ நகரில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது.
காஷ்மீரில் குங்குமப்பூ உற்பத்தியில் பாம்பூர் முக்கிய இடம் வகிக்கிறது. அந்த ஊரின் மண்ணும் வானிலையும் குங்குமப்பூ உற்பத்திக்கு உதவுகிறது. அங்கு உயர்தர குங்குமப்பூ உற்பத்தியாகிறது.
இலையுதிர் காலத்தில் இங்கு குங்குமப்பூக்கள் பூக்கும். அந்த நேரத்தில் பாம்பூர் தாஜ் மஹால் போல சுற்றுலாப்பயணிகளுக்கான இடமாக மாறிவிடும்.
குங்குமப்பூ சாகுபடியைப் பார்வையிட மக்கள் கூட்டம் குவியும். குங்குமத்தின் இனிமையான மணத்தை நுகர்ந்தபடி சுற்றுலாப்பயணிகள் திரிவதைப் பார்க்கலாம்.
காஷ்மீரில் குங்கும சாகுபடி செய்வது எளிதான காரியமில்லை. சரியான பருவ கால நிகழ்வுகள் மாறினால் குங்குமப்பூ உற்பத்தி பாதிக்கப்படும்.
குங்குமப்பூ மட்டுமல்லாமல் பாம்பூர் செல்ல இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. இங்கிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் பரிஹஸ்போர பட்டன் என்ற தொல்லியல் தளம் உள்ளது. அந்திபோரா என்ற கோவிலும் அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கக்கூடியது.
தொல்லியல் தலங்கள் தவிர தல் ஏரி, தசிஹம் தேசிய பூங்கா ஆகிய இடங்கள் இருக்கின்றன. தசிஹம் பூங்காவில் அரியவகை காஷ்மீர் மான்களைப் பார்க்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust