பாட்னா ரயில் நிலைய டிவிக்களில் விளம்பரத்துக்கு பதிலாக திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். கிட்டதட்ட மூன்று நிமிடங்கள் ஒளிபரப்பானதால், அங்கிருந்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் உள்ளூர்வாசிகளையும் தாண்டி, வெளிமாநிலத்தவரும் பயன்படுத்துவது வழக்கம். ஏராளமான மக்கள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ரயில்நிலையங்களில் பொதுவாக விளம்பரங்கள் ஒளிபரப்பவும், ரயில்கள் வருகை குறித்த தகவல்களை ஒளிபரப்பவும் தொலைக்காட்சிகள் பொறுத்தப்பட்டிருக்கும்.
அப்படி பாட்னா ரயில் நிலையத்தின் நடைமேடை 10ல் பொறுத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிகளில் கடந்த ஞாயிறு அன்று காலை 9.30 மணியளவில் விளம்பரத்துக்கு பதிலாக ஆபாச வீடியோ ஒளிபரப்பானது.
பலரும் அவ்விடத்தை விட்டு வெளியேற முற்பட்டனர். ஒரு சிலரோ இதனை வீடியோவாகவும், புகைப்படங்களும் எடுத்து பிளர் செய்து (blur) சமூக வலைத்தலங்களில் பகிரத் தொடங்கினர்
உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தவிர பயணிகளும் ரயில்வே போலீசாரிடமும், பாதுகாப்பு படையினரிடமும் புகார் அளித்தனர்.
இதனையடுத்து ரயில்வே போலீசார் விளம்பர ஒளிபரப்பு ஒப்பந்ததாரரை தொடர்புகொண்டு வீடியோ ஒளிபரப்பை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.
மேலும் விளம்பர ஒளிபரப்பு ஏஜன்சி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அந்நிறுவனத்துடனான ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டு, ரயில்வேவின் பிளாக் லிஸ்ட்டில் விளம்பர நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust