Port Blair: ஒரு காலத்தில் கொடூர சிறையாக இருந்த இடம் - பிரபல சுற்றுலா தலமாக மாறியது எப்படி? Twitter
இந்தியா

Port Blair: ஒரு காலத்தில் கொடூர சிறையாக இருந்த இடம் - பிரபல சுற்றுலா தலமாக மாறியது எப்படி?

Keerthanaa R

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகள் உலக பிரபல சுற்றுலா தலங்களுள் ஒன்று. இங்கு மொத்தம் 571 தீவுகள் உள்ளன. அவற்றில் 37 தீவுகளில் மனிதர்கள் வசிக்கின்றனர்

ராஜேந்திர சோழனின் காலத்தில் இத்தீவுகள் ஒரு முக்கிய கடற்படை தளமாக திகழ்ந்தது. சோழர்கள் தீவை மா-நக்கவரம் என்று அழைத்தனர். இதுவே தற்போது நிக்கோபார் என்கிற பெயர் வரக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்தமானில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் மற்றுமொரு தலம் தான் போர்ட் பிலேர்.

அந்தமானின் தலைநகரான இவ்விடத்திற்கு இந்தியாவிலிருந்து விமானம் மூலமாகவும் அல்லது கப்பல் மூலமாகவும் சென்றடையலாம்.

இயற்கையின் வனப்பும், வரலாற்று முக்கியத்துவமும் ஒன்றிணைந்த போர்ட் பிலேர் பயணிகளுக்கு ஒரு புது வித அனுபவத்தை அளிக்கிறது.

போர்ட் பிலேரில் பார்க்கவேண்டிய இடங்கள் என்னென்ன?

அந்தமான் என்றவுடன் முதலில் நமக்கு தோன்றுவது அங்கு அமைந்திருக்கும் செல்லுலார் சிறைச் சாலை தான். இதனை காலா பானி (கருப்பு தண்ணீர்) என்றும் அழைக்கின்றனர்

பிரிட்டிஷ் காலத்தில் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளை, அரசியல் கைதிகளை இந்த சிறையில் தான் அடைத்து வைத்தனர். பல கைதிகளில் மரணப்பீடமாக இந்த சிறை திகழ்ந்தது என்றே சொல்லலாம்.

1896ஆம் ஆண்டு இதன் கட்டுமானம் தொடங்கப்பட்டு, 1906ல் கட்டிமுடிக்கப்பட்டது. ஆறு வரிசைகளில் மூன்று தளங்கள் கொண்ட இச்சிறை, 1947ல் இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

அந்தமான் சிறையின் இருண்ட வரலாறு...

ராஸ் தீவு

போர்ட் பிலேரிலிருந்து சுமார் 15 நிமிடம் பயணித்தால் வருகிறது ராஸ் தீவு. இங்கு சிதைந்த பிரிட்டிஷ் கால கட்டிடங்கள் பல உள்ளன.

இதை தவிர ராஸ் தீவு பீனல் காலனியின் இடிபாடுகளுக்கு பிரபலமாக இருக்கிறது. பீனல் காலனி என்பது ஒரு சிறையாகும். கைதிகளை மனிதர்களிடமிருந்து தனித்து அடைத்துவைத்து, சித்திரவதைக்கு உள்ளாக்கும் இடமாக இருந்தது இந்த பீனல் காலனி.

இந்தியாவில் 1857ல் நடந்த புரட்சியில் கைதுசெய்யப்பட்டவர்களை அடைத்துவைக்க இந்த சிறை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது

கார்பின் கோவ் கடற்கரை

அமைதியை அனுபவிக்க, இயற்கை அழகை கண்டு ரசிக்க இந்த கார்பின் கோவ் கடற்கரை ஒரு சிறந்த வாய்ப்பை நமக்கு அளிக்கிறது. இங்கு சூரியன் மறைவதை காணலாம்.

இங்கு நீண்ட வரிசையில் பனை மரங்கள் இருக்கின்றன, மேலும், ஜெட் ஸ்கீ, ஸ்பீட் போட் போன்ற வாட்டர் ஸ்போர்ட்ஸ்களும் இருக்கின்றன. மாலை வரை மட்டுமே இந்த விளையாட்டுகளில் அவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இங்கு பாராசெயிலிங்கும் செய்யலாம்

மகாத்மா காந்தி கடல் தேசிய பூங்கா

பவளப்பாறைகள், அழகிய வண்ணமயமான, அரிய கடல்வாழ் உயிர்இனங்களை இங்கு காணலாம். இங்கு உயிரை வேட்டையாடும் மீன் வகைகள் இல்லாததால், ஸ்கூபா டைவிங் செய்ய சிறந்த இடமாகும்.

மேலும் இங்கு ஆமைகள் பாதுகாப்பு மையம் ஒன்றும் அமைந்திருக்கிறது. இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த உயிரினங்களை காக்கும்பொருட்டு இந்த மையம் செயல்படுகிறது

ஹாவ்லாக் தீவு

இந்த தீவில் தாரளமாக ஒரிரு நாட்கள் தங்கலாம். இங்குள்ள ராதாநகர் கடற்கரை, எலிபண்ட் பீச் நிச்சயம் பார்க்கவேண்டியவை. தவிர இங்கு டிரெக்கிங்கும் செல்லலாம்.

இந்த ராதாநகர் பீச் பிறை நிலவின் வடிவில் அமைந்திருக்கிறது.

இங்குள்ள காடுகளில் வெள்ளை தலை கொண்ட மைனாக்கள், மரங்கொத்திகளை காணலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?