Prasad Kishore : இந்தியா கூட்டணி குறித்து என்ன சொல்கிறார் தேர்தல் வியூக நிபுணர்? Twitter
இந்தியா

Prasanth Kishore: இந்தியா கூட்டணி குறித்து என்ன சொல்கிறார் தேர்தல் வியூக நிபுணர்?

Antony Ajay R

பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியலில் முக்கியமான வியூக நிபுணர். பீகாரைச் சேர்ந்த இவர், நரேந்திர மோடியின் பிம்ப கட்டமைப்பு மற்றும் விளம்பரப்படுத்துதலில் 2011ம் ஆண்டு அறியப்பட்டார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி குறித்து தனது வியூகங்களை கூறியுள்ளார்.

குஜராத் தேர்தலில் மோடி முதலமைச்சராக வென்றதிலும் இவரது பங்கு அதிகம். நிதிஷ் குமார் பீகார் தேர்தலில் வெற்றிபெறவும், பஞ்சாபில் அமரீந்தர் சிங்குக்காகவும், ஆந்திராவில் 2019ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி வெல்லவும் பணியாற்றினார்.

இப்போது தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக உடன் இணைந்து 2021 தேர்தலில் பணியாற்றினார். 2017ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றினார். ஆனால் அந்த ஆண்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதுதான் பிரசாந்த் கிஷோரின் மிகப் பெரியத் தோல்வி.

வெற்றிகரமான தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் இப்போது தானே அரசியல்வாதியாக உருவெடுத்து பிகாரில் பணியாற்றி வருகிறார்.

இந்தியா கூட்டணி பற்றி பேசிய பிரசாந்த் கிஷோர், "26 கட்சிகள் இருக்கும் இந்தியா கூட்டணியில் பீகார் முதல்வர் நித்திஷ் குமாருக்கு குறைவான முக்கியத்துவமே வழங்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக 2021ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடன் இணைந்து பணியாற்றிய போது, பாஜக 100 இடங்களை வென்றால் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றுவதில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டார்.

அந்த தேர்தலில் பாஜக 77 இடங்களை மட்டுமே வென்றது. அவரது வியூகம் பலித்தாலும் இப்போது அவர் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில்லை.

பீகாரில் தனது தலைமையில் அரசியல் ஒருங்கிணைப்பை முன்னெடுக்கும் அவருக்கும் முதல்வர் நித்திஷ் குமாருக்கும் இடையில் சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது.

நித்திஷ் குமாரால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 5 இடங்களைக் கூட வெல்ல முடியாது என சில நாட்களுக்கு முன்னர் கூறினார்.

முன்னாள் வியூக நிபுணராக இருந்தாலும் பிரசாந்த் கிஷோரின் கருத்துக்களை ஜனதாதளம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பிரசாத் கிஷோரின் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றிய ஜனதாதளம் தலைவர் ராஜிவ் ராஞ்சன் சிங், "கிஷோர் பாஜகவுக்காக பணியாற்றுவது போலத் தெரிகிறது" எனக் கூறியிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?