BGMI
BGMI Twitter
இந்தியா

பப்ஜி : மீண்டும் தடை செய்யப்பட்ட APP - என்ன நடந்தது? | PUBG

NewsSense Editorial Team

PUBG பப்ஜி மொபைல் என்பது டென்சென்ட் கேம்ஸின் ஒரு பிரிவான லைட்ஸ்பீட் & குவாண்டம் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட ஒரு இலவச போர் ராயல் வீடியோ கேம் ஆகும். இது PUBG: Battlegrounds இன் மொபைல் கேம் தழுவலாகும். 19 மார்ச் 2018 அன்று ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் -க்காக வெளியிடப்பட்டது.

இது கிராஃப்டன், டென்சென்ட் மற்றும் விஎன்ஜி கேம்ஸ் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டது. மே 2022 வாக்கில், பப்ஜி மொபைல் 100 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் குவித்தது. அதே நேரத்தில் 8.42 பில்லியன் டாலருக்கு மேல் வசூலித்தது. இது நான்காவது அதிக வசூல் செய்த மொபைல் கேம் ஆகும். இது எல்லா நேரத்திலும் அதிகம் விளையாடப்படும் மொபைல் வீடியோ கேமும் ஆகும்.

இப்படிப்பட்ட பப்ஜி மொபைல் கேம் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை அறிந்திருப்பீர்கள். அதன் பிறகு, தென் கொரிய கேம் டெவலப்பர் கிராஃப்டன் ஒரு வருடத்திற்குப் பிறகு அதே கேமை மீண்டும் சிறிய மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தி, அதற்கு Battlegrounds Mobile India அல்லது BGMI என்று பெயரிட்டது. ஆனால் தற்போது பிஜிஎம்ஐயும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

இதுவரை இந்த தடை குறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. என்றாலும், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இரண்டிலிருந்தும் பிஜிஎம்ஐ கேம் அகற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிராஃப்டனும் இந்த தகவலை உறுதிசெய்து, "கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து பிஜிஎம்ஐ எவ்வாறு அகற்றப்பட்டது என்பதை நாங்கள் விரைவில் தெளிவுபடுத்துகிறோம். மேலும் அது குறித்த தகவலைப் பெற்றவுடன் உங்களுக்குத் தெரிவிப்போம்" என்றது.

ஆப் ஸ்டோர்களில் இருந்து கேம் அகற்றப்பட்டாலும், உங்கள் ஸ்மார்ட்போனில் கேம் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், உங்களால் விளையாட முடியும். ஆனால் அந்த கேமை அப்டேட் செயல்படாது.

இதற்கிடையில், இந்த விளையாட்டை நீக்குவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு அரசாங்கத்திடம் இருந்து கிடைத்துள்ளதாகக் கூகுள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. "உத்தரவைப் பெற்றவுடன், அதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பாதிக்கப்பட்ட டெவலப்பருக்கு நாங்கள் தெரியப்படுத்தியுள்ளோம். மேலும் இந்தியாவில் உள்ள ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிக்கான அணுகலைத் தடுத்துள்ளோம்" என்று அது கூறியது. அதாவது இனிமேல் இந்த கேம் இந்திய கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்காது.

Battlegrounds Mobile India, பிரபலமான போர் ராயல் கேம் பப்ஜி மொபைலின் இந்தியப் பதிப்பாகும். இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட பிறகு BGMI ஆக இது மீண்டும் தொடங்கப்பட்டது. ஒரு வருடத்திற்குள் இந்த கேம் இந்தியாவில் 100 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கடந்து விட்டது.

பிப்ரவரி 2022 இல் பிரஹார் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சீன கேமிங் செயலியான BGMI-PUBG ஐத் தடுக்கவும், பிப்ரவரி 14, 2022 அன்று தடைசெய்யப்பட்ட 54 சீன பயன்பாடுகளின் பட்டியலில் அதைச் சேர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.

IANS பத்திரிகையின் அறிக்கையின்படி, ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் இணைந்த சுதேசி ஜாக்ரன் மஞ்ச், பிரஹாரின் இந்த தடை முயற்சியை ஆதரித்துள்ளது. மற்றும் BGMI-PUBG இரண்டு கேம்களின் முன்னோடியான சீனா குறித்தும் இதில் சீனாவின் தாக்கம் குறித்தும் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

செப்டம்பர் 2, 2020 அன்று இந்திய அரசாங்கத்தால் பப்ஜி மொபைல் கேம் தடை செய்யப்பட்டது. பத்து மாதங்களுக்குள், BGMI என்ற பெயரில் பப்ஜியின் மேம்படுத்தப்பட்ட கேம் மீண்டும் தொடங்கப்பட்டது. BGMI என்பது சீன ஆப்களில் மிகப் பெரியது. அது பப்ஜியின் அதே அம்சங்களுடன் மீண்டும் தொடங்கப்பட்டு மறுபெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது இதையும் இந்திய அரசு தடை செய்திருக்கிறது. மீண்டும் இந்த கேம் வேறு பெயரில் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?