Martin Shwenk Twitter
இந்தியா

Mercedes: ஆட்டோவில் பயணம் செய்த மெர்சிடிஸ் சிஇஓ - இதுதான் காரணமா?

பிரபல கார் தயாரிக்கும் நிறுவனமான மெர்சிடிஸின் சிஇஓ தனது அனுபவம் குறித்து பகிர்ந்த விஷயம் தற்போது இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.

Keerthanaa R

போக்குவரத்து நெரிசல் காரணமாக தனது மெர்சிடிஸ் காரை விட்டுவிட்டு ஆட்டோவில் சென்றுள்ளார் மெர்சிடிஸின் இந்திய சிஇஓ மார்டின் ஷ்வென்க்.

போக்குவரத்து நெரிசல் என்பது பாரபட்சமில்லாமல் அனைவரும் எதிர்கொள்ளும் அன்றாட விஷயங்களில் ஒன்று. இந்த போக்குவரத்து நெரிசல்களால் நிகழ்ந்த சுவாரஸ்யமான கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அந்த வகையில், பிரபல கார் தயாரிக்கும் நிறுவனமான மெர்சிடிஸின் சிஇஓ தனது அனுபவம் குறித்து பகிர்ந்த விஷயம் தற்போது இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.

மெர்சிடிஸ் நிறுவனத்தின் இந்திய சிஇஓ மார்டின் ஷ்வென்க். இவர் பூனேவில் சமீபத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டுள்ளார். வெகு நேரம் காத்திருந்தும் வாகன நெரிசல் குறையாததால், தனது மெர்சிடிஸ் S சீரிஸ் காரை விட்டு விட்டு, ஒரு கிலோமீட்டர் வரை நடந்து சென்றுள்ளார். அதன் பிறகு, சாலையோரம் கிடைத்த ஆட்டோவில் ஏறி, தான் செல்லவிருந்த இடத்திற்கு சென்றுள்ளார் மார்டின்.

தன் இந்த அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் மார்டின் பகிர்ந்திருந்தார். ஆட்டோவின் பின் இருக்கையில் அமர்ந்து தான் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, கீழே

"உங்களது S-Class மெர்சிடிஸ் பூனேவின் அற்புதமான சாலைகளின் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஒருவேளை காரிலிருந்து இறங்கி சிறிது தூரம் நடந்துசென்று ஆட்டோ பிடித்து செல்லலாமா?" என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலானது. பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஒருவர் என்ன ஆனாலும், நான் காரில் உட்கார்ந்தபடி அதன் வசதிகளை அனுபவித்துக்கொண்டிருப்பேன் என்றார்.

இன்னொருவர், மார்டினின் எளிமையை பாராட்டியிருந்தார். இன்னொருவரோ, "ஆட்டோ கிடைத்ததால் நீங்கள் பிழைத்தீர்கள்...அனைவருக்கும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்காது" என்று கூறியிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?